நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே..
(நேற்று..)
கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை
கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை
கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை
காதல் சுவை ஒன்றுதானே காற்று வீடும் வரை
(நேற்று..)
வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா
வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம்
வாசம் இல்லாமலே காற்று வந்தாடலாம்
நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா?
(நேற்று..)
படம்: புதிய முகம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுஜாதா
வரிகள்: வைரமுத்து
Friday, April 25, 2008
384. நேற்று இல்லாத மாற்றம் என்னது
பதிந்தவர் MyFriend @ 7:01 AM
வகை 1990's, AR ரஹ்மான், சுஜாதா
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
ஏதோ நினைவுகள்!
நல்லா இருக்கு :))))
மீண்டும் சுஜாதா அவ்வ்வ்வ்
நல்லாயிருக்கு ;-)
vasam illamalea katru vanthadalam-suvasam illamalea katryvanthadalam tavarai thiruthikkollavum..............
wonderfull............i love this...........
மிகவும் அருமை
Post a Comment