ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள் போட்டு வைத்திருந்தேன்
என் கண்கள் அதன் காவல்
என் நெஞ்சம் அதன் மஞ்சம்
(ஒரு முத்தாரத்தில்..)
அந்த மாலை இந்தப் பெண்ணின் சொந்தமானதே
அந்தி மாலை நேரம் பார்த்து ஆடுகின்றதே
பொன்னரங்கம் தன்னில் வந்து
என்னை மட்டும் பாடச் சொன்னதென்ன
கண்ணரங்கம் மின்ன மின்ன காதல் கொண்டதோ
அந்தரங்கம் கண்டு கொள்ள அழைப்பு வந்ததோ
அந்தக் கிண்ணம் சொந்தம் இல்லை
என்று இன்று கண்டு கொண்டதென்ன
(ஒரு முத்தாரத்தில்..)
நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே
காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே
(நீல வானம்..)
பாடல் ஒன்று.. ராகம் ஒன்று
தாளம் கொஞ்சம் மாறி விட்டதென்ன
காலம் என்னும் தேவன் என்னை கேலி செய்கிறான்
கோலம் வேறு கொள்கை வேறு காண சொல்கிறான்
இன்று மட்டும் நாளை இல்லை
என்ற சொல்லில் உண்மை இனி இல்லை
(ஒரு முத்தாரத்தில்..)
படம்: சொர்க்கம்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
விரும்பி கேட்டவர்: அபி & நட்ராஜ் அம்மா
Monday, April 28, 2008
395. ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து
பதிந்தவர் MyFriend @ 7:31 AM
வகை 1960's, MS விஸ்வநாதன், P சுசீலா
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
வெகு அருமையான பாடல்.
குடிப்பவரின் மயக்கத்தை சிவாஜி வெளிப்படுத்தும் விதம்,அவர் மனைவியான
விஜயா தவிப்பதும் படம் பார்க்கும்போது மனம் நெகிழ்ந்துவிடும்.எத்தனை குடும்பங்களை இந்தக் குடிப்பழக்கம் தின்றிருக்கிறது!!!
மிக்க நன்றி மைஃப்ரண்ட்.
மிக்க னன்றி அனு! னான் கேட்டதுக்காது இந்த பாட்டை போட்டதுக்காக.வல்லியம்மா னல்லா உரைக்கும் படி சொல்லியிருக்காங்க!
இப்படிக்கு
அபிஅம்மா
அபி அம்மா, எங்க உறவில் ஒருவர் மிகச் சிறந்த கட்டுமான வல்லுனர். அவரும் இப்போது தான் மீண்டு வருகிறார் இந்தப் பழக்கத்திலிருந்து.
எலா வீடுகளிலும் இந்த வருத்தம் புகுந்து விடுகிறது. பால்மணம் மாறாக் குழந்தைகளைப் (2)பார்க்க்கும்போது மனம் துவண்டுவிடும். சாமியிடம் கேட்டுக்கொள்ளுவேன் இந்தப் பழக்கம் இல்லாத தேசம் ஒண்ணு இருக்கணுமே அதில இவனைக் கொண்டு போய்ப் போடணும் அப்பதான் திருந்துவான் என்று. அது ஒருவிதத்தில பலிச்சிருக்கு.
அங்கெயும் அவன் ஒழுங்கா இருக்கணுமே என்று இப்பக் கவலை.
அனும்மா,
இது 70களில் வந்த படம்மா.
அருமையான படம்.நன்றி.
Post a Comment