கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு
யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு
பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிளையாச்சு
ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு
உலகம் முழுக்க ஒலிக்கும் நாயன ஓசை
உனக்கும் எனக்கும் இதுதான் வேறென்ன ஆசை
மகராசி மனம்போல மணக்கட்டும் மாலை
(கௌரிக்கு..)
சின்ன சின்ன கண்ணோரம் மின்னல் மின்ன
வண்ண வண்ண செந்தூரம் கையில் மின்ன
வண்ண பூவை முந்தானை மூட மூட
கொண்டு வந்த பட்டாட ஆட ஆட
காலமெல்லாம் வாழப்போறா
நம்மை எங்கே தேடப்போறா
என்றும் உள்ள தென்றல் போல
எங்க வீட்டு பெண்ணே வாழ்க
என்றும் உள்ள தென்றல் போல
எங்க வீட்டு பெண்ணே வாழ்க
(கௌரிக்கு..)
எங்கள் கல்யாண பெண்ணுக்கென்ன
தெண்பாண்டி மீனாட்சி
மஞ்சள் கொண்டாடும் காமாட்சி
(கௌரிக்கு...)
படம்: புது வசந்தம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
விரும்பி கேட்டவர்: அர்சாத்
விரைவில் திருமணம் புரியப்போகும் தன் தோழி ஜெயந்திக்காக இந்தப் பாடலை விரும்பி கேட்கிறார் அர்சாத்.
Friday, April 25, 2008
387. கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு
பதிந்தவர் MyFriend @ 8:35 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment