உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
(உன்னை..)
நான் உனக்காகவே ஆடுவேன்
கண் உறங்காமலே பாடுவேன்
(உன்னை..)
அன்று ஒரு பாதி முகம்தானே கண்டேன்
இன்று மறுபாதி எதிர்ப்பார்த்து நின்றேன்
கை வலையோசை கடல் பொங்கும் அலையோசையோ
என செவியார நான் கேட்க வரவில்லையோ
(உன்னை..)
கம்பன் மகனாக நான் மாற வேண்டும்
கன்னி தமிழால் உன் எழில் கூற வேண்டும்
என் மகாராணி மலர்மேனி செம்மாங்கனி
என மடி மீது குடியேறி முத்தாட வா
(உன்னை..)
எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னை தொடராமல் நான் இங்கு வந்தேன்
நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா
நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா
(உன்னை..)
படம்: பட்டிக்காட்டு ராஜா
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி
Tuesday, April 8, 2008
357. உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
பதிந்தவர் MyFriend @ 6:33 AM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
நல்ல பாட்டு, பழசும் போடுறீங்களா பலே பலே ;-)
மிக அருமையான பாட்டு... ரொம்ப நாளாச்சு கேட்டு...
Post a Comment