Friday, April 18, 2008

372. பொய்க்கால் குதிரையில் போருக்கு போகும் ஐய்யனாரு...

இன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்க கிண்ணத்து சிங்கம் @ சின்ன கைப்புள்ள @ மதுரை வீரன் அழகப்பன் இராம்-க்கு இந்த பாடல் சமர்ப்பணம்..



லலலலலலலலலலலல...

பொய்க்கால் குதிரையில் போருக்கு போகும் ஐய்யனாரு நான்தான்
மைய தொட்டு மீசை வரைஞ்ச மதுரை வீரன் நான்தான்
(பொய்க்கால்..)

வாடகை சைக்கிளில் உலகை சுற்றும் வடிவேல் முருகன் நானடா
வத்திக் குச்சியில் கம்பு சுழற்றும் வீரன்டா சூரன்டா தீரன்டா
அட வீரன் சூரன் தீரன் என்றும் நானடா

அழகப்பா நா அழகப்பா.. அழகப்பா...
அழகப்பா நா அழகப்பா..


மாசத்தில் ஒரு நாள் குளிப்பவன் நான்
மாமியார் புடவையை துவைப்பவன் நான்
(மாசத்தில்..)
அட்டைக் கத்தில் வெட்டிய அந்த
ஆலமரத்தை சாய்ப்பவன்
நெல்லு குத்துற உலக்கை எடுத்து
பல்லைக் குத்தியே காட்டுவேன்
(அழகப்பா..)

மூட்டை பூச்சிய ஒத்த விரலால
ரத்தம் கக்க வைப்பேன்டா
ஓட்டை விழுந்த உளுந்து வடையை
சிமேண்ட் பூசி அடைப்பேன்டா
நெருப்புக்கு வேகாத பருப்புடா

அடேங்கப்பா அடேங்கப்பா
(அழகப்பா..)

கள்ளி பாலுல காப்பி போடுவேன்
எல்லா கட்சிக்கும் ஓட்டு போடுவேன்
நல்லி எலும்புல நாதஸ்வரம் வாசிப்பேன்டா

ஏய் அழகப்பா..

பாயை சுத்தி காது கொடைபவன்
கால மடக்கி கபடி ஆடுவேன்
ஓசி சோத்துல உடம்பை வளர்க்கும் உத்தமன்டா

அழகப்பா..

சோலைக்காட்டு பொம்மைய போல சொந்த காலில் நிப்பவன்டா
குப்புற விழுந்தா மண்ணு ஒட்டும்ன்னு
மீசையை வைக்காமல் வாழ்பவ்ண்டா
தலைமுடியை தலையில் தாங்கும் சிங்கம்டா

அடேங்கப்பா அடேங்கப்பா..
(அழகப்பா..)

செய் செய்யுன்னு சொன்னாலும் எனக்கு
செய்வினை செஞ்சவன் யாரடா?
நான் இறும்பு மழுஷன்னு சொன்னதும்
நேத்து என்னை எடைக்கு போட்டவன் யாரடா?
செறுப்பு கடித்தாலும் திருப்பி கடிக்காத
மன்னிக்கும் பக்குவம் உடையவன்டா
(அழகப்பா..)

பிச்சைக்காரனிடம் கடனை வாங்குவேன்
ஆட்டு சாணியில் அல்வா கிண்டுவேன்டா
ஊரே துரத்தினாலும் எவன் கையிலும் மாட்டாத
ஓட்டப் பந்தயன் வீரன்டா..

அடேங்கப்பா.....

படம்: இந்திரலோகத்தில் நா. அழகப்பன்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: திப்பு

விரும்பி கேட்டவர்: தேன்கிண்ணம் தேனீகள்

8 Comments:

சென்ஷி said...

இனிய‌ பிற‌ந்த‌நாள் வாழ்த்துக்க‌ள் ராம் :))

சென்ஷி said...

ந‌ல்ல‌வேளை நான் பிழைத்துக்கொண்டேன் :)).. த‌ங்க‌ச்சி ராம் மேல‌ உன‌க்கு இவ்ளோ பாச‌மா.. போட்டு தாளிச்சிட்டியேம்மா :))

ஆயில்யன் said...

தேன் கிண்ணத்து ராம் தேனீக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சென்ஷி said...

//குப்புற விழுந்தா மண்ணு ஒட்டும்ன்னு
மீசையை வைக்காமல் வாழ்பவ்ண்டா
தலைமுடியை தலையில் தாங்கும் சிங்கம்டா//

:)))

ரிப்பீட்டே :))

Sanjai Gandhi said...

//இன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்க கிண்ணத்து சிங்கம் @ சின்ன கைப்புள்ள @ மதுரை வீரன் அழகப்பன் இராம்-க்கு இந்த பாடல் சமர்ப்பணம்..//

ஹாஹா..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராம். :)

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள்ண்ணே :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் சின்னதல..

இராம்/Raam said...

அடபாவிகளா.... இப்பிடியொரு வாழ்த்தா??? :)

Last 25 songs posted in Thenkinnam