காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
மணச்சோலையின் காவியமே
உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்
(காதல் ஓவியம்..)
மாமரத் தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே
மாமரத் தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே
அந்த மாறன் அருகினிலே
பூந்தென்றல் கமழ்ந்து வர
நான் என்னை மறந்தேனே
(காதல் ஓவியம்..)
கூந்தலில் வாசனை மலர்கள் அவன் சூடும் அழகினிலே
கூந்தலில் வாசனை மலர்கள் அவன் சூடும் அழகினிலே
என்ன சுகமோ தெரியவில்லை
என் தோளை தொடுவதென்ன
பொன் மேனி சிலிர்ப்பதென்ன
(காதல் ஓவியம்..)
மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன
மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன
அவன் பார்வை குளிர்வதென்ன
ஒரு பாசம் பிறப்பதென்ன
அங்கு நாணம் தடுப்பதென்ன
(காதல் ஓவியம்..)
படம்: கவிக்குயில்
இசை: இளையராஜா
பாடியவர்: சுஜாதா
வரிகள்: பஞ்சு அருணாசலம்
விரும்பி கேட்டவர்: கானா பிரபா
Wednesday, April 23, 2008
379. காதல் ஓவியம் கண்டேன்
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
ஆகா ஆகா, அருமை , கவுத கவுத
மிக்க நன்றி ஒலிபரப்பியதுக்கு
//மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன
அவன் பார்வை குளிர்வதென்ன
ஒரு பாசம் பிறப்பதென்ன
அங்கு நாணம் தடுப்பதென்ன//
அழகான வரிகள். இப்டியெல்லாம் பழையபாட்டுல கவிதைத்துவம் இருந்திருக்குன்னே தெரியலை. நன்றிங்க ஃமைபிரண்டு:)
அதுசரி அதென்ன முழுப்பாட்டையும் ரெக்கார்ட் பண்ணாம 29 நொடி சாம்பிள்???
முழு பாட்டிற்க்கு நன்றிகள் ஃமைபிரண்டு:)
Post a Comment