ஒன்னு ரெண்டு தொண்ணுத்தெட்டில்
உன்னை சந்தித்தேன்
நான் என்னை சிந்தித்தேன் (2)
நிலவென்று சொல்ல மாட்டேன்
தேய்ந்து விடுவாய்
நிழல் என்று சொல்ல மாட்டேன்
நீங்கி விடுவாய்
உறவென்று சொல்ல மாட்டேன்
விலகி விடுவாய்
உயிர் என்றும் சொல்ல மாட்டேன்
பிரிந்து விடுவாய்
(ஒன்னு ரெண்டு..)
நினைவில் என் நினைவில்
நீங்காமல் நீதான் வாழும் ஓவியம்
மழையில் உன் மழையில்
நான் நனைவது போலே ஏதோ ஞாபகம்
நீ கிடைத்த சேதியில் நெஞ்சம் அலை மோதும்
நான் படுத்து தூங்கவே உந்தன் நிழல் போதும்
வானம் மானம் எல்லாம் இழந்தேன்
உன்னால் தானே மீண்டும் எழுந்தேன்
உன்னு ரெண்டு..
(ஒன்னு ரெண்டு..)
யாரும் அறியாமல்
ஒரு பாலையில் பூ மனம் காதலில் மருகியதே
ஓசை இல்லாமல்
என் ஊணும் உயிரும் ஒன்றாய் உருகியதே
காற்று வீசும் மாலையில்
காத்திருக்க வேண்டும்
கண்ணா எந்தன் காதலை
காதில் பேச வேண்டும்
காட்டும் அன்பில் என்னை மறந்தேன்
உந்தன் மூச்சில் நானும் கரைந்தேன்
(ஒன்னு ரெண்டு..)
படம்: புதுமைப் பித்தன்
பாடியவர்: சித்ரா
0 Comments:
Post a Comment