Sunday, April 13, 2008

365. அனார்கலி அனார்கலி



கரி ரிசாசசா
கரி ரிசாசசா
கரி ரிசாசசா
கரி ரிசாசசா

அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
உலகத்திலே மிகப்பெரும் பூவும் நீயடி
நதிகளிலே சஞ்சிர நதியும் நீயடி
ஸ்தம்பித்தேனசி உன் பார்வையில்

அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
சிரிப்பும் அழுகையும் சேறும் புள்ளியில் என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேறும் புள்ளியில் கண்டு பிடித்தேன்
கடல் காற்று நீ நான் பாய் மரம்
(அனார்கலி..)

இயந்திர மனிதனை போல் உன்னையும் செவேனே
இரு விழி பார்வைகளால் உன்னையும் அசைப்பேனே
அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம்
அழகியின் திமிரில் ருசி அதிகம்
அதை இன்று தானே உன்னிடம் கண்டேன்
கவிஞனுக்குக்கெல்லாம் குறும்பு அதிகம்
கவிஞனின் குறும்பில் சுவை அதிகம்
அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்
நடை நடந்து போகையில் நீல கடல் நீ
நாணம் கொண்டு பார்கையில் நீ இலக்கியமானாய்
(அனார்கலி..)

நறுமணம் என்பதற்கு முகவரி பூக்கள் தானே
என் மனம் என்பதற்கு முகவரி நீதானே
என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம்
முதல் வரி தந்த முகவரி நீ
இருதயம் சொல்லும் முகவரி நீதான்
இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம் இருப்பிடம் தந்த முகவரி நீ
என்னிடம் சேறும் முகவரி நீதான்
மழை துளிக்கு மேகமே முதல் முகவரி
உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ
(அனார்கலி..)

படம்: கண்களால் கைது செய்
பாடியவர்: கார்த்திக்
இசை: AR ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து

1 Comment:

ஆயில்யன் said...

//கரி ரிசாசசா
கரி ரிசாசசா
கரி ரிசாசசா
கரி ரிசாசசா
//

இது ரொம்ப கஷ்டம் இருந்தாலும் மை ப்ரெண்ட் உங்களின் ஆர்வத்துக்கு என் வாழ்த்துக்களுடன்....!

பாட்டு நல்லா இருக்கு:)

Last 25 songs posted in Thenkinnam