போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனசத் தொட்டு
தர பாக்கும் கருதப்போல வெட்கப்பட்டு
போறாளே பொன்னுத்தாயி புழுதிக் காட்டில் மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்குக் கட்டுப் பட்டு
வெள்ளாமை நீதான்
வெள்ளாடு நாந்தான்
வெட்கத்த விட்டுத் தள்ளம்மா
வெள்ளாம காட்ட
விட்டுத் தர மாட்டா
பண்பாட கட்டிக்காக்கும்
பட்டிக்காட்டுக் கருத்தம்மா
(போறாளே பொன்னுத்தாயி..)
படிக்காத புள்ள மனசெல்லாம் வெள்ளை
இவளது நாக்குல போக்குல மனசில கள்ளமில்ல
உன் மேலே கிறுக்கு
உள்ளூர இருக்கு
வாய்விட்டு சொல்லத்தானே தோதேயில்ல தோதேயில்லை
வைகைக்கு கடலை சேர யோகமில்ல யோகமில்ல
அது சரி வியாழனும் வெள்ளியும் இருப்பது தூரமில்ல
(போறாளே பொன்னுத்தாயி..)
நீ கண்ட வள்ளி
சப்பாத்திக் கள்ளி
கள்ளியின் இலையிலும் காயிலும் கனியிலும்
முள்ளிருக்கும்
அடி போடிக் கள்ளி
நீதாண்டி அல்லி
கண்டாங்கி சேலை கட்டும்
கண்ணகியே கண்ணகியே
உன் கொசுவத்தில் உசுர கட்டி
கொல்லுறியே கொல்லுறியே
வர வர பொம்பள பொழப்பையே வம்புல மாட்டுறியே..
(போறாளே பொன்னுத்தாயி..)
படம்: கருத்தம்மா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா, உன்னிமேனன்
வரிகள்: வைரமுத்து
=============================================================
போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள ஊரை விட்டு
சாமந்திப் பூவா
ஊமத்தம் பூவா
கருத்தம்மா எந்தப் பூவம்மா?
அஞ்சாறு சேவல் உள்ளூரில் ஏங்க
பொதி மாட்டு வண்டி மேலே
போட்டு வச்ச மூட்டை போல
(போறாளே பொன்னுத்தாயி..)
நீ வச்ச பாசம்
நீ சொன்ன நேசம்
கடைசியில் ஊமையும் ஊமையும்
பேசிய பாஷையடி
தெக்கத்தி காத்து திசை மாறி வீச
ஒன்னோட மேகம் ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாக்கு ஒன்னு வாடுதடி வாடுதடி
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது சாதிக்கு ஆனதடி
நெஞ்சுக்குழி காஞ்சு நெடுங்காலம் ஆச்சு
ஒரு உயிர் வீட்டுக்கும் காட்டுக்கும் கூட்டுக்குள் இழுக்குதும்மா
சேமித்த காசு செல்லாமப் போச்சு
சொல்லாத சொல்லு பாரம் அம்மா பாரம் அம்மா
சோத்துக்கும் சொந்தத்துக்கும் தூரமம்மா தூரமம்மா
பொறு பொறு ஏழைக்கும் வாழைக்கும் நாளைக்கு நன்மையம்மா
(போறாளே பொன்னுத்தாயி..)
(சாமந்தி பூவா..)
(போறாளே பொன்னுத்தாயி..)
படம்: கருத்தம்மா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து
Friday, April 18, 2008
371. போறாளே பொன்னுத்தாயி...
பதிந்தவர் MyFriend @ 6:11 PM
வகை 1990's, AR ரஹ்மான், உன்னி மேனன், சுவர்ணலதா, சுஜாதா
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
நன்றி அனானி சார். :-)
do not publish
:-) இன்னும் டைட்டில்..
//Anonymous said...
do not publish
:-) இன்னும் டைட்டில்..
//
மாத்தியாச்சு... :-)
//உசுருள்ள நாக்கு ஒன்னு வாடுதடி வாடுதடி
திருத்தம் - அது நாக்கு இல்லை "நாத்து"
// ஒன்னோட மேகம் ஓடுதடி ஓடுதடி
திருத்தம் - ஒன்னோட இல்லை "ஒன்னான"[ஒன்றான]
Post a Comment