Saturday, April 26, 2008

392. மயிலிறகே மயிலிறகே



மயிலிறகே மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல!
மழை நிலவே! மழை நிலவே!
விழியில் எல்லாம் உன் உலா!

உயிரை தொடர்ந்து வரும்
நீதானே மெய் எழுத்து!
நான் போடும் கை எழுத்து அன்பே!
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து!
காதல்தான் கல் எழுத்து அன்பே!

மயிலிறகாய்! மயிலிறகாய்!
வருடுகிறாய் மெல்ல!
மழை நிலவே! மழை நிலவே!
விழியில் எல்லாம் உன் உலா!

மதுரை பதியை மறந்து
உன் மடியினில் பாய்ந்தது வைகை!
மெதுவா...மெதுவா..மெதுவா...
இங்கு வைகையில் வைத்திடு கை!
பொதிகை மலையை பிரிந்து
என் பார்வையில் நீந்துது தென்றல்!
அதை நான் அதை நான் பிடித்து
மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்!
ஓர் இலக்கியம் நம் காதல்!
வான் உள்ள வரை வாழும் பாடல்!
உயிரை தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து!
நான் போடும் கை எழுத்து அன்பே!
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே!
(மயிலிறகாய்..)

தமிழா! தமிழா! தமிழா!
உன் தமிழ் இங்கு சேலையில் வருதா?
அமிர்தாய்! அமிர்தாய்! அமிர்தாய்!
கவி ஆக்கிட நீ வருவாய்!
ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்!
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்!
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா?
பால் விளக்கங்கள்! நீ கூறு!
ஊர் உறங்கட்டும்! உரைப்பேன் கேளு!
(மயிலிறகே)

வருடுகிறாய்... மெல்ல!
வருடுகிறாய் மெல்ல!
வருடுகிறாய்....மெல்ல!
வருடுகிறாய் மெல்ல!

படம்: அ! ஆ!
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், மதுஸ்ரீ

விரும்பி கேட்டவர்: ஜஸ்மீன்

Last 25 songs posted in Thenkinnam