பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆனிப் பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்
பாட்டுதான் தாலாட்டுதான் கேட்கக் கூடும் என நாளும்
வாடினாள் போராடினாள் வண்ணத்தோகை நெடுங்காலம்
தாய் முகம் தரிசனம் தரும் நாள் இது
சேய் மனம் உறவெனும் கடல் நீந்துது
பாசம் மீறும்போது பேசும் வார்த்தை ஏது
மயக்கத்தில் மனம் சேர்ந்தது
(பூங்காவியம்)
யார் மகள் இப்பூமகள் ஏது இனி இந்தக் கேள்வி
கூட்டிலே தாய் வீட்டிலே வாழும் இனி இந்தக் குருவி
பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்
நாளெல்லாம் தளிர் விடும் இந்தப் பூவனம்
வானம் பூமி வாழ்த்தும்
வாடைக் காற்றும் போற்றும்
புதுக் கதை அரங்கேறிடும்
(பூங்காவியம்)
படம் : கற்பூர முல்லை
குரல் : கே.ஜே.ஜேசுதாஸ்
இசை : இளையராஜா
Thursday, April 24, 2008
382. பூங்காவியம் பேசும் ஓவியம்
பதிந்தவர் கப்பி | Kappi @ 9:18 AM
வகை 1980's, KJ ஜேசுதாஸ், இளையராஜா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment