Thursday, April 3, 2008

353.நீ போகுமிடமெலாம் நானும்வருவேன் போபோ போ!

ஆண்:போ போ போ..ஓஓ ஓ..
பெண்: வாவா வா ஆஆஆ
ஆண்: நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ
பெண்: நீ வாழுமிடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா

ஆண்: பச்சைக்கிளியாய் மாறலாம் பறந்து வானில் ஓடலாம்
நான் இச்சைக்கிளியாய் மாறுவேன் என்றும் உன்னை நாடுவேன் -நீ (பச்சைக்கிளியாய்)
போபோ போ
பெண்: உள்ளம் உள்ளது என்னிடம் உரிமை உள்ளது உன்னிடம்
இனி நான் போவது எவ்விடம் எது சொன்னாலும் சம்மதம்
வா வா வா
ஆண் : போ போ போ
ஆண்: காலம் உன்னிடம் ஆடலாம் கவிஞர் உன்னைப்பாடலாம்
மாதர் உன்னைப் போற்றலாம் மனதில் என்னைக்காணலாம் (காலம்)
போ போ போ
பெண்: பொங்கும் மஞ்சள் குங்குமம் பூவும் உன்னிடம் சங்கமம்
எதுவும் இல்லை என்னிடம் என்னைத்தந்தேன் உன்னிடம்
வா வா வா
ஆண்: நீ போகுமிடமெலாம் நானும் வருவேன் போ போ போ
பெண் : நீ வாழுமிடமெலாம் நானும் வருவேன் வா வா வா





















Get this widget Track details eSnips Social DNA

படம்: இதயக்கமலம்


பாடல்வரிகள் :கண்ணதாசன்


இசை: கேவி.மகாதேவன்


பாடியவர்கள்: பி.சுசீலா ,PB.ஸ்ரீநிவாஸ்

2 Comments:

வல்லிசிம்ஹன் said...

ஹ்ம்ம்ம்ம்ம்.இப்படி ஒரு சதி நடக்கிறதா.எனக்குத் தெரியாதே.
முத்துலட்சுமி கயல்விழி,1965 பாட்டுப் போட்டு என்னை மயக்கி விட்டீங்களே. ரொம்ப நன்றிம்மா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) ஆகா உங்களூக்கு தெரியாதா இந்த சதி கொஞ்ச நாளா நடக்குது... நன்றி நன்றி.. பழய பாட்டு ரசிகர்களும் இருக்காங்களே ..

Last 25 songs posted in Thenkinnam