Monday, April 7, 2008

356. சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு



சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?
தென்றலே உனக்கேது சொந்த வீடு?
(சிட்டுக்குருவிக்கென்ன..)
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு
(உலகம்..)
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?... கட்டுப்பாடு..... ஓஹோ..

மரத்தில் படரும் கொடியே
உன்னை வளர்த்தவரா இங்கு படர விட்டார்?
(மரத்தில்..)
மண்ணில் நடக்கும் நதியே
உன்னை படைத்தவரா இந்த பாதை சொன்னார்?
உங்கள் வழியே உங்கள் உலகு
இந்த வழிதான் எந்தன் கனவு
(சிட்டுக்குருவிக்கென்ன..)

பழத்தை கடிக்கும் அணிலே
இன்று பசிக்கின்றதோ? பழம் ருசிக்கின்றதோ?
பாட்டு படிக்கும் குயிலே
நீ படித்ததுண்டோ? சொல்லி கொடுத்ததுண்டோ?
நினைத்ததெல்லாம் கிடைக்கவேண்டும்
நினைத்த படியே நடக்கவேண்டும்
(சிட்டுக்குருவிக்கென்ன..)

வளரும் தென்னை மரமே
நீ வளர்ந்ததை போல் நான் நிமிர்ந்து நிற்பேன்
வணங்கி வளையும் நாணல்
நீ வளைவதை போல் தலை குனிவதில்லை
பார்க்கும் கண்கள் பணிய வேண்டும்
பாவை உலகு மதிக்க வேண்டும்
(சிட்டுக்குருவிக்கென்ன)

படம்: சவாலே சமாளி
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

3 Comments:

SP.VR. SUBBIAH said...

அருமையான - கருத்துள்ள பாடல்!
பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே!

ஆயில்யன் said...

நல்லா இருக்கு :))

நிஜமா நல்லவன் said...

நல்ல பாடல்.

Last 25 songs posted in Thenkinnam