Wednesday, April 9, 2008

359. இது குழந்தை பாடும் தாலாட்டு



இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
(இது குழந்தை..)

நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
உறவுறாத பெண்ணை எண்ணி நாளெளல்லாம் வாழ்கிறேன்
(இது குழந்தை..)

வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்
(இது குழந்தை..)

உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது
உறவுறுவாள் என தானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது
(இது குழந்தை..)

படம்: ஒரு தலை ராகம்
இசை: T ராஜேந்தர்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

2 Comments:

pudugaithendral said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல். அர்மையான பாடல் வரிகள். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.

Anonymous said...

//எனக்கு மிகவும் பிடித்த பாடல். அர்மையான பாடல் வரிகள். எத்தனை//

enakkum thaan

Last 25 songs posted in Thenkinnam