Saturday, April 26, 2008

394. இடம் பொருள் பார்த்து



இடம் பொருள் பார்த்து இதயத்தை மாற்று
இது ஒரு காதல் கூத்து
விழிகளை கோர்த்து விரல்களை சேர்த்து
உயிரினில் என்னை போர்த்து
என்னை போல எவரும் உன்னை காதலிக்க முடியாது
முடியும் என்றால் கூட அவனை காதலிக்க முடியாது
(இடம் பொருள்..)

உன் நகங்களில் பார்த்தேன்
என் இருபது முகங்கள்
உன் கன்னங்கள் பார்த்தேன்
என் இதழின் ரேகைகள்
காதல் என்ற மரத்தின் கீழே புத்தனாகிறேன்
போதை கொண்ட உந்தன் மடியில் பூக்களாகிறேன்
நீ பார்க்கும் திசை எந்தன் நடை பாதையே
நீ பேசும் மொழி எந்தன் அகராதியே
(இடம் பொருள்..)

உன் விழிகளின் வெயிலில்
என் வேர்வை இனிக்கிதே
உன் புன்னகை நினைவில் என் தூக்கம் தொலைந்ததே
காதல் என்ற தாயின் மடியில் குழந்தை ஆகிறேன்
மழலை பேசும் மொழியில் இன்று மனிதனாகிறேன்
கனவோடு உனை காண இமை தேடுவேன்
இமையாக நான் வந்து உனை மூடுவேன்
(இடம் பொருள்..)

படம்: சித்திரம் பேசுதடி
இசை: சுந்தர் சி. பாபு
பாடியவர்கள்: சுஜாதா, கார்த்திக்

விரும்பி கேட்டவர்: தங்கமணி சிபி

2 Comments:

MyFriend said...

சூப்பர் பாடல்.. சிபியோட தங்கமணி விரும்பி கேட்காமல் இருந்திருதால் நானே பாடல் விரும்பி கேட்டு தேன்கிண்ணதுல போட்டிருப்பேன். :-)

M.Rishan Shareef said...

எனக்கு மிகவும் பிடித்த பாடலொன்றைத் தந்தமைக்கு நன்றி மை பிரண்ட்.

பாடலைக் கவனித்தீர்களா? கவர்ச்சியின் சாயல் சிறிதுமின்றி அழகான வரிகளிலும்,இசையிலும் அருமையானவொரு காதல்பாட்டு.

சில எழுத்துப்பிழைகள் உள்ளன அவற்றை மட்டும் திருத்திவிடுங்கள் மைபிரண்ட்.

என்னை போல எவரும் //இன்று// உன்னை காதலிக்க முடியாது
முடியும் என்றால் கூட அவனை காதலிக்க முடியாது
(இடம் பொருள்..)

உன் நகங்களில் பார்த்தேன்
என் இருபது முகங்கள்
உன் //கண்ணத்தில்// கன்னங்கள் பார்த்தேன்
என் இதழின் ரேகைகள்
காதல் என்ற மரத்தின் கீழே புத்தனாகிறேன்
//போதி// போதை கொண்ட உந்தன் மடியில் பூக்களாகிறேன்
நீ பார்க்கும் திசை எந்தன் நடை பாதையே
நீ பேசும் மொழி எந்தன் அகராதியே

Last 25 songs posted in Thenkinnam