Tuesday, April 29, 2008

398. பூ பூத்தது தோட்டம் யார் போட்டது




பூ பூத்தது தோட்டம் யார் போட்டது
பூங்காற்றிலே வாசம் யார் சேர்த்தது

தோன்றும் மறையும்
பகலும் இரவும்
மாறும் விந்தை அது யார் செய்வது

(பூ பூத்தது)


இதழ் நுனி துளிப் பனி சுமந்தாலும்
அதை ஒரு கதிரவன் கொண்டு செல்வான்
தன்வசம் தன் மனம் இருந்தாலும்
எவர்வசம் அது செல்லும் யார் அறிவார்

இயற்கை நடத்தும் வேள்வி இது
விடைகள் தெரியாக் கேள்வி இது
ஓர் ஆயிரம் அதிசயம் உள்ளது
அன்புதான் இழைகளாய் அனைத்திலும் ஓடுது

(பூ பூத்தது)

என் சிறு பருவத்தின் தனிமையிலே
வளர்ந்ததும் தனிமையின் கொடுமையிலே
உறவுதான் வறுமையை உணர்ந்தாலும்
அது தரும் காயங்கள் எனக்கில்லையே

இருளில் இங்கோர் நிலவு வர
இதமாய் நெஞ்சை வருடி வர
இதயம் நிரம்புதே
இன்பமே ததும்புதே
உறவில்லா உறவிது
உலகெல்லாம் சொல்லலாம்

(பூ பூத்தது)

படம் : மும்பை எக்ஸ்பிரஸ்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: சோனு நிகம், ஷ்ரேயா கோஷல்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam