நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே
(நானாக)
கீழ் வானிலே ஒளி வந்தது
கூட்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர்வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்
(நானாக)
மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண வேறில்லை
(நானாக)
படம்: தூங்காதே தம்பி தூங்காதே
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
Friday, April 25, 2008
385. நானாக நானில்லை தாயே
பதிந்தவர் MyFriend @ 12:44 PM
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
மை பிரண்ட்!
தாயின் பெருமை சொல்லும் அரிய பாடல்..என்றும் கேட்கப் பிடிக்கும்.
பாடலாசிரியர் பெயர் போட்டு அவர்களையும் பெருமைப் படுத்துவோம்.
இப்பாடலுக்கு வரிகளே பெருமை.
வைரமுத்து பாடல் என்பது என் அனுமானம்.
Post a Comment