உயிரே உயிரே
முதலாம் உயிரே
என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்?
சுவாசம் தந்த காற்றே
உயிர் எங்கே உள்ளது?
உயிரில் உருவம் இல்லை
விஞ்ஞானம் சொன்னது
உருவம் உள்ளதே ஒரு பெயரும் உள்ளதே
எண்ணும் போதெல்லாம் அது எதிரில் வந்ததே
(உயிரே..)
ஒரு முறை என் கையில்
உறங்கிட நீ வந்தால்
உலகமே என் பையில் அடங்கிடுதே
மறுமுறை என் தாயின்
கருவரைக்குள்ளே நான்
இருப்பது போல் இன்பம் வருகிறதே
ஒளியின்றியே கண்ணில் கண்ணால்
கதை பேசலாம் அன்பே
உறங்காமலே நானும் நீயும்
இமை மூடலாம் அன்பே
(உயிரே..)
நடந்திடும் பாதைகள் நெருப்பென ஆனாலும்
இறுதியில் உன் வாசல் அடங்கிடுதே
எழுத்துக்கள் எல்லாமே மறந்திட நேர்ந்தாலும்
அடிக்கடி உன் பெயரை எழுதிடுவேன்
பிரிவில்லையே ஆனால் ஏனோ
இரண்டாகினோம் அன்பே
தடையில்லையே ஆனால் ஏனோ
தினம் ஏங்கினோம் அன்பே
(உயிரே..)
படம்: வானம் வசப்படும்
இசை: மகேஷ்
பாடியவர்கள்: ஹரிஹரன், கங்கா
Sunday, April 6, 2008
354. உயிரே உயிரே முதலாம் உயிரே...
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment