Saturday, April 19, 2008

373. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்



நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

எங்கள் வீடு கோகுலம்
என் மகன் தான் கண்ணனாம்
தந்தை வாழுதேவனோ
தங்கமானா மன்னனாம்
(எங்கள் வீடு..)
(நல்லதொரு..)

அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் தந்த்து
(அன்னை..)
பிள்ளை செல்வம் என்னும் வண்ணம் கண்ணன் பிறந்தான்
நன்றி என்னும் குணம் கொண்டது
நன்மை செய்யும் மனம் கொண்டது
எங்கள் இல்லம் பேரை கண்ணன் வளர்ப்பான்
(நல்லதொரு..)

வெள்ளம் போல ஓடுவான்
வெண்மணல் மேல் ஆடுவான்
கானம் கோடி பாடுவான்
கண்ணன் என்னைத் தேடுவான்
(கானம் கோடி..)

மாயம் செய்யும் மகன் வந்தது
ஆயர்பாடி பயம் கொண்டது
அந்த பிள்ளை செய்யும் லீலை நானறிவேன்
இந்த பிள்ளை நலம் கொள்ளவும்
என்னைப் பார்த்து எனை வெல்லவும்
கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து
நான் வளர்த்தேன்
(நல்லதொரு...)

கோலம் கொண்ட பாலனே
கோவில் கொண்ட தெய்வமாம்
தாயில் பிள்ளை பாசமே
தட்டில் வைத்த தீபமாம்

பாசம் என்று எதை சொல்வது
பக்தி என்று எதை சொல்வது
அன்னை தந்தை காட்டும் நல்ல சொந்தம் அல்லவா?
பிள்ளை என்னும் துணை வந்தது
உள்ளம் என்றும் இடம் கொண்டது
இல்லம் கண்டு தெய்வம் தந்த செல்வம் அல்லவா?
(நல்லதொரு..)

படம்: தங்கப்பதக்கம்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: P சுசீலா, TM சவுந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam