ஆண்: ஒரு கிளியின் தனிமையிலே சிறுகிளியின் உறவு
உறவு உறவு உறவு உறவு
இரு கிளிகள் உறவினிலே புதுகிளி ஒன்று வரவு
வரவு வரவு வரவு வரவு
விழிகளிலே கனவு மிதந்து வர
உலகமெல்லாம் நினைவு பறந்து வர
தினம் தினம் உறவு உறவு புதிது புதிது
வரவு வரவு இனிது இனிது
கனவு கனவு புதிய கனவு
(ஒரு கிளியின் தனிமையிலே)
பெண்: முத்து ரத்தினம் உனக்கு சூட
முத்திரைக் கவி இசைந்துப் பாட
நித்தம் நித்திரைக் கரைந்து ஓட
சித்தம் நித்தமும் நினைந்துக் கூட
சிறு மழலை மொழிகளிலே
இனிமை தவழ இதயம் மகிழ
இரு மலரின் விழிகளிலே
இரவு மறைய பகலும் தெரிய
ஆசையால் உனை அள்ள வேண்டும்
அன்பினால் எனைக் கொல்ல வேண்டும்
சேரும் நாள் இதுதான்
(ஒரு கிளியின் தனிமையிலே)
ஆண்: கட்டளைப்படி கிடைத்த வேதம்
தொட்டணைப்பதே எனக்குப் போதும்
பெண்: மொட்டு மல்லிகை எடுத்து தூவும்
முத்துப் புன்னகை எனக்குப் போதும்
ஆண்: ஒரு இறைவன் வரைந்த கதை
புதிய கவிதை இனிய கவிதை
பெண்: கதை முடிவும் தெரிவதில்லை
இளைய மனதை இழுத்தக் கவிதை
ஆண்: பாசம் என்றொரு ராகம் கேட்கும்
பார்வை அன்பென்னும் நீரை வார்க்கும்
பாடும் நாள் இதுதான்
(ஒரு கிளியின் தனிமையிலே)
படம்: பூவிழி வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள் : K.J.ஜேசுதாஸ், சித்ரா
விரும்பிக் கேட்டவர்: நாமக்கல் சிபி
1 Comment:
அருமையான பாடல்.
நன்றி
Post a Comment