Saturday, January 26, 2008

215. பூவாய்க் கொஞ்சம் பொட்டாய்க் கொஞ்சம்...



மஞ்சக்கிழங்கே மஞ்சக்கிழங்கே
என்னை எடுத்து நீ உடுத்துக்கடி
பூவாய்க் கொஞ்சம் பொட்டாய்க் கொஞ்சம்
நித்தம் நீ எடுத்துச் சூடிக்கடி

அடியே உனக்கெனத்தானே நா...
அடிமேல் அடியென தொடர்வேன் நா...
அருகிலே என்றுமே இருப்பேன் நா...
அழகே அழுதிட விடுவேனா
அன்பது அழுதிடப் பொறுப்பேனா
கண்மணி என்றுமுன் காவல் நா...

விழியால் விழி நோக்கி விரசம் அதுபோக்கி அவளை உனில் தேக்கி காதல் செய்தாயா
உலகில் உயிர்போல உயிரில் மனம்போல மனதில் இளம்போல சேர்ந்தே இருப்பாயா
வறுமை வரும்போதும் முதுமை விழும்போதும் அவளே உயிரென்று காதல் கொள்வாயா
காலம் கடந்தாலும் தடைகள் வளர்ந்தாலும் ஓடி ஒளியாமல் தேடி வருவாயா

இரவிலும் பகலிலும் எப்போதும் அவளது நினைவிலே இருக்கிறனே - ஐயோ
முன்னாலும் பின்னாலும் என்னாளும் அவளென நில்லாமல் வருகிறனே

காலம் கடந்தாலும் தடைகள் வளர்ந்தாலும்
ஓடி ஒளியாமல் தேடி வருவாயா

அவள் மழையில நனைகையில் நனைகிறனே - அந்த
வெயிலில அவளுடன் காய்கிறனே
அவள் சிரிக்கையில் அவளுடன் சிரிக்கிறனே
அவள் அழுகையில் எனக்குள்ள அழுகிறனே
என்னவளை என்னுடனே கண்ணின் மணிபோலே என்றும்
எண்ணி எண்ணி நெஞ்சில் வைச்சுக் காத்திடுவேன்

மஞ்சக்கிழங்கே மஞ்சக்கிழங்கே
என்னை எடுத்து நீ உடுத்துக்கடி
பூவாய்க் கொஞ்சம் பொட்டாய்க் கொஞ்சம்
நித்தம் நீ எடுத்துச் சூடிக்கடி

காதல் காதல்தான் இந்தக் காளை கொண்டதுண்மைக் காதல்தான்
காதல் காதல் என்று துடிக்கின்றான் - அவள்
பேரைச்சொல்லுகையில் சிலிர்க்கின்றான்
அவள் அழைக்கையில் தொலைபேசி விட்டுவிட்டுத் துடிக்கும்
இதைக் காண இவன் நெஞ்சம் நிக்காமலே துடிக்கும்
நண்பிதனைக் காதலித்துக் கஷ்டப்படுறான் - அவள்
வாழ்க்கைத் துணையாக இவன் இஷ்டப்படுறான்
காதலரை நண்பராக்கத் தவிப்பாரே பெண்ணே
நண்பன்தனைக் காதலிக்க மறுக்காதே

வாழ்விலும் தாழ்விலும் உன்னோடுதான் பெண்ணே என்னாளும் நான் வருவேன்
உயிர் நின்னாலும் போனாலும் உன்னோடுதான் பெண்ணே என்னாளும் நான் இருப்பேன்
உன் சுமையதனையும் நான் சுமந்திடுவேன்
உன் கவலைகள் அதனையும் கலைத்திடுவேன்
நீ தினம்தினம் மகிழ்ந்திட நான் இருப்பேன்
இந்த உலகமே இனித்திட வைத்திடுவேன்


அல்பம் : அடி மேல் அடி
பாடல் வரி : Sujeeth G
இசை : திஷாந்தன்
பாடியவர் : Sujeeth G + திஷாந்தன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam