தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா..?
காதல் கண்கள் உறங்கிடுமா...
(தென்றல்..)
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
(ஒன்று..)
நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவைப்போலவே
வாலை குமரியே நீயும் வந்த போதிலே .. வந்தபோதிலே
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா
இதய வானிலே இன்ப கனவு கோடியே ... கனவு கோடியே
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ... ஆடும் போதிலே
வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா
வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா
வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா
வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா
படம்: பெற்ற மகனை விற்ற அன்னை
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: AM ராஜா, P சுசீலா
பாடலாசிரியர்: மருதக்காசி
விரும்பி கேட்டவர் மற்றும் பாடல் வரி உதவி: கதிர்
Sunday, January 6, 2008
171. தென்றல் உறங்கிய போதும்
பதிந்தவர் MyFriend @ 10:48 AM
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
மிகவும் அருமையான எனக்குப் பிடித்தமான பாடலும் கூட.
இதில் வரும்..' இதய வானிலே இன்ப 'தனம்' கோடியே...என்று வருகிறது. அது 'தனமா'..'கனவா'?
'இதய வானிலே இன்ப கனவு கோடியே' இது சரியா?
குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவள் இல்லை. இருந்தாலும் வார்த்தைகள் தப்பானால் அர்த்தமும் தப்பாகிவிடுமல்லவா? நான் சொன்னது தவறென்றாலும் குட்டவும்..பிகாஷ்..யூ ஆர் மை ஃப்ரெண்ட்!!!
நன்றி.
ஆஹா.. அது கனவுதாங்க.. இதோ மாத்திட்டேன். ;-)
நன்றி.
வானம்பாடி ஜோடி கானம் ........
வாசப் பூவும் போல வாழத் தயங்குமா என்று இருக்க வேண்டும் பழகுமா என்று அல்ல
Post a Comment