MGR-PuthiyaBhoomi-... |
சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக்கொள்வேன் கரம் தொட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக்கொண்டேன் வளை இட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக்கொண்டேன் வளை இட்டு
வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக்கொண்டாய் வளை இட்டு
பொங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப்போல் பூப்போல் தொட்டு
தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்
தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்
பால் மழலை மொழி படித்தவளை
முகம் பட்டால் பட்டால் படியும்
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
இரு கண்ணை சொன்னால் பக்கம்
வந்தால் தந்தால்
நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ
(வந்தவளை..)
வானமழைப்போல் ஆனவளை
பூவாய் எங்கே எங்கே மறப்பாள்
வானமழைப்போல் ஆனவளை
பூவாய் எங்கே எங்கே மறப்பாள்
நீ அவளை விட்டு போகும்வரை
அது இங்கே இங்கே இருக்கும்
மின்னும் கைவளை மிதக்கும் தென்றலை
அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று பெண்ணை கெஞ்சும்
வரை சுவைத்தால் சுவைக்காதோ
(வந்தவளை..)
படம்: புதிய பூமி
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: TM சௌந்தராஜன், P சுசீலா
பாடலாசிரியர்: கண்ணதாசன்
விரும்பி கேட்டவர்: இளா
4 Comments:
என் பிறந்தநாளில்(தை-2) என் சரி பாதிக்கு இதை சமர்பிக்கிறேன்
அருமையான பாட்டுங்க. வளை வளைன்னு வருது.
இளா...இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
நன்றி ஜி.ரா
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் இளா - பிறந்த நாள் பரிசு ம.பா க்கு அருமையான பாடல் ஒன்று.
Post a Comment