டூட்டிங் பக்கம் போற பிள்ளை என்னக் கொஞ்சம் பாரன்
உத்தரவு தாறன் பிள்ளை முத்தம் ஒண்டு தாவன்
அண்ணனிட்டச் சொன்னா என்ன நானா ஒடிப்போவன்
அப்பரிட்டச் சொல்லு பிள்ளை நாளை வீட்ட வாறன்
பெண்ணே உன்தன் பின்னால் வந்தா காணம நீ போவாயோ
காணாமலே நானும் போனா பின்னால நீ வருவாயோ
கண்ணே என்னக் கனவில் கண்டா கிட்ட வந்து பேசாயோ
ஆனால் என்ன தெருவில கண்டா எட்டி எட்டி போறாயோ
கண்ணே போடும் நாடகம் என்ன என்னட்ட நீ சொல்வாயோ
என்னட்ட நான் சொல்லச் சொன்னா கொப்பரிட்டச் சொன்னாயோ
ஊருக்குள்ள என்னப் பற்றி எழு பேரைக் கேளாயோ
கேட்ட பின்னே என்ன தேடி அங்கே இங்கே ஓடாயோ
தேடி நீயும் என்னை வந்து கேப்சில காணாயோ
சிரிச்சு நீயும் பேசிய பின்னே சொப்பிங் போவம் என்பாயோ
ஷொப்பிங் எண்டு நானும் வந்தா ஷொப்பையே நீ வாங்குவியோ
காதல் செய்ய வேணும் எண்டா காசு வேணும் சொல்லுவியோ
நல்ல பெடியன் நானடி பிள்ளை நாயே பேயே ஏசாத
நக்கல் நான் அடிக்கிறதால நாசமாப்போ சொல்லாத
நீதான் என்ர உலகம் சொன்னா என்னை நீயும் நம்பாயோ
என்னப் பாத்துச் சொல்லடி பிள்ளை உண்மையிலயே நம்பெலயோ
பிம் ஒண்டை வாங்கிக்கொண்டு ஊரைச் சுற்றி வந்திடுவம்
காசு கஷ்டம் வாந்தாச் சொல்லு மட்டை போட்டு வெண்டிடுவம்
=================================
அல்பம் : அடி மேல் அடி
பாடல் வரி : Sujeeth G
இசை : திஷாந்தன்
பாடியவர் : Sujeeth G
Tuesday, January 22, 2008
210. Tooting பக்கம் போற புள்ள...
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
நன்று :-).
...
/பிம் ஒண்டை/
'பிஎம்(BMW) ஒண்டை...' என்று வரவேண்டும் என்று நினைக்கின்றேன். 'பிம்' எண்டு தனியவிட்டால் வேறு அர்த்தம் வருமல்லோ?
Superrrrrrrrrrru
பாட்டு நல்லாயிருக்கு.... :)
BTW... welcome to thenkinnam group... :)
LOOOSU!!!!!!!!!
டிசே :-) copy paste பண்ணேக்க கவனிக்காமல் விட்டிட்டன் :-).
இளா ராம் மைபிரன்ட் என்னையும் கோதாவில இறக்கி விட்டிட்டாங்க :-))
வருக வருக!! :))
பாட்டு அட்டகாசமா இருக்கு!! நன்றி!
Post a Comment