PanneerPushpangal-... |
கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடும்
அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலைப் பூக்களே புதுச் சோலை பூக்களே
(கோடை கால..)
வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
நம் உறவுகளை வந்து கூடாதோ
திரு நாளும் கூடட்டும் சுகம் தேடி ஆளட்டும்
இவைகள் இளமாலைப் பூக்களே புதுச் சோலை பூக்களே
(கோடை கால..)
ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே
ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே
பெண் மலையருவி பன்னீர் தூவி
பொன் மழையழகின் சுகம் ஏற்காதோ
இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள்
இவைகள் இளமாலைப் பூக்களே புதுச் சோலை பூக்களே
(கோடை கால..)
படம்: பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசிய வாசுதேவன்
ஜனவரி 16-இல் தன் பிறந்த நாளை கொண்டாடிய விவசாயி இளாவுக்காக இந்த பாடல் சமர்ப்பிக்கிறோம்..
4 Comments:
Cute song!
My best wishes to ILA too!! :-)
சிஸ்டர், செம பாட்டு இது
என்னோட ஆல் டைம் பேவரிட்டில் இதை விட்டு லிஸ்டே இல்லை. அருமையான பாட்டு.
விவசாயிக்கும் காலம் கடந்த வாழ்த்துக்கள்.
இந்தப் பாட்டு என்னோட பெரீய விருப்பப்பாடல்னு கண்டுபுடிச்ச தேன்கிண்ணம் மக்களுக்கு என்னோட நன்றி. http://www.youtube.com/profile?user=vijayakumarvellore. இந்தப் பாட்டை இங்கேயிருந்து வாரம் ஒரு முறையாவது கேட்டுருவேன்,
நன்றி- பிரபா, சிவிஆர்
Post a Comment