Thursday, January 10, 2008

181. மஞ்சள் முகமே மங்கல விளக்கே



ஆஞ்சநேய மதி பாடலானணம்
காஞ்சனாத்ரிகம நீய விக்ரகம்
பாரிஜாததொரு மூல வாசினம்
பாவயாமி பவ மான நந்தனம்
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருத மஸ்த காஞ்சல்யம்
பாஸ்பபாரி பரி பூர்ணலோஷணம்
மாருதி நமது ராட்ஷசாந்தகம்

மனோஜவம் மாருததுல்ய வேகம்
ஜித்தேந்திரியம் புத்தி மதாம்பரிஷ்டம்
வாராத்மஜம் வானரயூதமுக்யம்
ஸ்ரீராமதூதம் சிரசனமாமி சிரசனமாமி சிரசனமாமி

மஞ்சள் முகமே மங்கல விளக்கே வருக வருக வா
மஞ்சள் முகமே மங்கல விளக்கே வருக வருக வா
தூறல் சிந்திடும் காலைத் தென்றலே வா வா வா
கண்களுக்குள்ளே தொலைந்த உருவம்
கண்ணீரின் வழியே வரைந்த கடிதம்
தெறித்த துளியால் வரிகள் மறைய
உப்புக் கரிசல் உறையிலே
உணர்ந்து கொள்வோம் உதட்டிலே

(மஞ்சள் முகமே)

வாசத்தோடு வந்த உன்னை நாசிகளுக்குள் நுழைத்துக் கொண்டேன்
பாரம் தாங்க வந்த விழுதே மரத்தின் வேராய் ஆன அமுதம்
பூக்களை சுமக்கும் புனித பயணம்
ஊமை நெஞ்சின் ஊர்வலத்தில்
உனது குரலில் கோடி ராகம்
விரதமிருந்து நான் நான் நான் வேண்டி வந்த நாயகன்
இன்று வரைக்கும் நீ நீ நீ அள்ளித் தந்த உறவுகள்
இனி விருதுகள் என் விருதுகள்

(மஞ்சள் முகமே)

நெஞ்சு என்னும் பஞ்சு இங்கே நெருப்பு பட்டும் எரியவில்லை
காயம் பட்ட பறவை ஒன்று கட்டுப் போட்ட கைகள் ஒன்று
இரண்டும் பறக்க வானம் உண்டு
புத்தன் பாதை சித்தன் பாதை மாறிப் போனேன் மறந்துப் போனேன்
வெள்ளத்தில் நீந்திய நான் நான் நான் வறண்ட போது மூழ்கினேன்
இருட்டில் ஓடிய நான் நான் நான் விளக்கில் இடறி வீழ்கிறேன்
உனது மடியில் வாழ்கிறேன்

(மஞ்சள் முகமே)

படம்: ABCD
இசை: D.இமான்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam