Sunday, January 6, 2008

173. காசு காசு காசு...



சென்னை பட்டணம் எல்லாம் கட்டணம்
கையை நீட்டினால் காசு மழை கொட்டணும்
(சென்னை..)
குடிக்கிற தண்ணீர் காசு
கொசுவை விரட்ட காசு
அர்ச்சனை சீட்டும் காசு
தேர்தல் சீட்டும் காசு
ஆட்டோ மீட்டர் காசு
திருட்டு வீடியோ காசு
போலி சாமியார் காசு
அட பிணத்தின் நெத்தியிலும் காசு
காந்தி ஜெயந்தி மதுக்கடை திறந்து மறைவா விற்றால் காசு
தொட்டில் தொடங்கி சவப்பெட்டி வரையில் தொட்டதுக்கெல்லாம் காசு
காசு.. ஆயாயோ ஆயாயோ
காசு.. ஆயாயோ ஆயாயோ
காசு.. ஆயாயோ ஆயாயோ
காசு.. ஆயாயோ ஆயாயோ
ஹேய்.. (சென்னை..)

பூமி வட்டமா காசு வட்டமா
நாடே சுத்துதே நாகரீகம் கத்துதே
கடற்கரை காதல் காசு
கவர்மெண்ட் மாப்பிள்ளை காசு
நீல படமும் காசு
அந்த சிவப்பு விளக்கும் காசு
LKGயும் காசு
MBBS காசு
இட்லியை விற்றாலும் காசு
உன் கிட்னியை விற்றாலும் காசு
வயசு பொண்ணு வயசானாலே வரங்கள் கிடைக்க காசு
கர்ப்பினி வயதில் பெண் சிசு இருந்தால் கர்ப்பத்தை கலைக்கவும் காசு
காசு.. காசு காசு காசு காசு காசு
காசு.. காசு காசு காசு காசு காசு
காசு.. ஆயாயோ ஆயாயோ
ஹேய்.. (சென்னை..)

தீம் த நகுதீம் த நகுதீம்
தீம் த நகுதீம் த நகுதீம்

கட்சி நீருட கொள்கை இல்லைடா
கர்ரெண்சியை நீட்டுடா கையில் கோர்ட்டுடா
ஊர்வலம் போனா காசு
வன்முறை செஞ்சா காசு
ஜாதி சங்கம் காசு
அட சந்தன மரமும் காசு
கூட்டணி சேர்ந்த காசு
அட தீ குளிக்கவும் காசு
புறம்போக்கு நிலமும் காசு
அட இலவசம் கூட காசு
கடவுளை மனிதன் காட்டி கொடுக்க யூதாஸ் வாங்கினான் காசு
காசின் மதிப்பை அறியா மனிதன் உலகில் செல்லா காசு
காசு.. ஆயாயோ ஆயாயோ
காசு.. ஆயாயோ ஆயாயோ
காசு.. ஆயாயோ ஆயாயோ
காசு.. ஆயாயோ ஆயாயோ

காசு.. காசு காசு காசு காசு காசு
காசு.. காசு காசு காசு காசு காசு
காசு.. காசு காசு காசு காசு காசு
காசு.. காசு காசு காசு காசு காசு

படம்: அள்ளி தந்த வானம்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: உதித் நாராயணன், ஸ்ருதி

1 Comment:

MyFriend said...

காசு காசு காசு..

எல்லாத்துக்கும் காசுங்கிறதுக்கு நன்றாக உணர்த்தும் பாட்டு...

Last 25 songs posted in Thenkinnam