TamilBeat.Com - Me... |
மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்
நீராடும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்
சீராரும் வதனமென..
மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்
சிலேட்டு குச்சி கடன் வாங்கலாம்
சிலேட்டில் பேரெழுதி பார்க்கலாம்
கொட்டு வச்ச வாத்தியாரை தொட்டு வணங்கலாம்
முட்டிப்போட்டு நின்ன இடத்தை முத்தம் கொடுக்கலாம்
பள்ளிக்கூடத்தில் சொன்ன பாடத்தில்
இந்த உலகத்தை நாமறிந்தோம்
அன்னை மடி என நம்மை தாங்கிய
இந்த பள்ளியை ஏன் மறந்தோம்?
(மீண்டும்..)
ஏலேலோ ஏலேலோ லோ..
ஏலேலோ ஏலேலோ லோ..
உயிரும் உடலும் கருவறைக்குள்ளே உற்பத்தியாகிறது
உறவு நட்பு காதலை பள்ளி சொல்லித் தருகிறது
(உயிரும்..)
தலைக்கு மேலே வளர்ந்தால் கூட தாய்க்கு நீ பிள்ளைதான்
எத்தனை பெரிய மனிதனானாலும்
பள்ளிக்கு நீ மாணவன் தான்
உன்னை சுமந்த பள்ளிக்கூடம் கேட்பாரற்று கிடக்கிறதே
உந்தன் வரவை எதிர்ப்பார்த்து
ஊருக்குள் தனியாய் நிற்கிறதே
(மீண்டும்..)
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இருக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இருக்க வேண்டாம்
படித்தவன் எல்லாம் பள்ளியை மறந்து
எந்திர வாழ்வில் தொலைந்துவிட்டான்
படிக்காதவன் தான் பள்ளியை பார்த்து
ஏக்கத்தோடு தசிக்கிறான்
பத்து மாதம் சுமந்த தாய்க்கே
பணிவிடைகள் செய்கின்றோம்
பத்து வருடம் சுமந்த பள்ளிக்கு
என்ன செய்ய நினைக்கின்றோம்
இருக்கும் கோவில்கள் போதாதென்று
புதிதாய் கோவில்கள் கட்டுகின்றோம்
பள்ளிகள் எல்லாம் கோவில்கள் என்பதை
ஏனோ நாமும் மறக்கின்றோம்..
(மீண்டும்..)
படம்: பள்ளிக்கூடம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: பரத்வாஜ்
0 Comments:
Post a Comment