Saturday, January 12, 2008

183. அலைகளின் ஓசைகள்..



அலைகளின் ஓசைகள் தானடி
அகதியின் தாய்மொழி ஆனதே
எனக்கென யாரோ..
என்னை நான் தினம் கேட்கிறேன்

அலைகளின் ஓசைகள் நானடா
அகதியாய் ஏங்குவதேனடா?
உனக்கென நானே..
ஒற்றைப் பெண்ணென வாழ்கிறேன்

தன்னை தொலைத்தவன் நானே..
மண்ணை பெரும் வரை காத்திருப்பேன்

உன்னை தொலைத்து விட்டாலே..
இங்கொரு அகதியாய் நானிருப்பேன்

முள்ளின் இமைகளினால் கண்கள் விழித்திருப்பேன்
எந்தன் இமைகளினால் உன்னை உறங்க வைப்பேன்
மெதுவாய் இமை நீ திறந்தால்
எனை நான் அறிவேன்

ஒரு நாள் ஒரு நாள் புயலாய் கடந்தே புலம் பெயர்வேன்
புயலாய் கடந்தால் மொழியாய் நிலமாய் உடனிருப்பேன்
தெருவெல்லாம் அணல் அடித்தால் தென்றல் ஏற்குமா?
தலை சாய இடம் கொடுத்தால் கண்கள் வேர்க்குமா?

தீயில் செய்த திண்பண்டம் தித்திக்காது பெண்ணே
ஆயுதம் தான் திருகாணி ஆகாதே
தன்னை தொலைத்தவன் நானே
மண்ணை பெரும் வரை காத்திருப்பேன்

உன்னை தொலைத்து விட்டாலே
இங்கொரு அகதியாய் நானிருப்பேன்
எந்தன் இமைகளினால் உன்னை உறங்க வைப்பேன்
மெதுவாய் இமை நீ திறந்தால்
எனை நான் அறிவேன்

உனை போலே உனை போலே
கடல் நீர் அலையாய் கொதிக்கிறதே
உலை மேல் உலை மேல்
இவன் ஒரு படகாய் மிதக்கிறதே

அலை தாண்டும் அகதிக்கெல்லாம் ஈரமில்லையே
நிலவோடு கதைப்பதற்கே நேரமில்லையே

முள்ளில் செய்த கூட்டில்தான் காக்கா குஞ்சி வாழும்
உன்னை விட்டு என் ஜீவன் போகாதே

தன்னை தொலைத்தவன் நானே
மண்ணை பெரும் வரை காத்திருப்பேன்

உன்னை தொலைத்து விட்டாலே
இங்கொரு அகதியாய் நானிருப்பேன்
எந்தன் இமைகளினால் உன்னை உறங்க வைப்பேன்
மெதுவாய் இமை நீ திறந்தால்
எனை நான் அறிவேன்

படம்: ராமேஸ்வரம்
இசை: நிரு
பாடியவர்கள்: ஹரிசரண், கல்யாணி
பாடலாசிரியர்: கபிலன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam