Adi Anarkali.mp3 |
அடி அனார்கலி அடியே அனார்கலி
கனவு காட்சியில் வந்த காதல் தேவதை
என் இதயம் என்பதோ உன் வசந்த மாளிகை
(அடி அனார்கலி..)
தேன் என்ற சொல் தித்தித்திடுமா?
இல்லை தீ என்ற சொல் சுட்டுவிடுமா?
அட உன் பேரை இங்கு நான் சொல்வதால்
பூ பூக்குதே ஆச்சர்யமா..
பால் என்ற சொல் பொங்கிவிடுமா?
இல்லை நீர் என்ற சொல் சிந்திவிடுமா?
அட நம் காதலை நீ சொன்னதும்
நான் நனைகிறேன் சந்தோஷமா..
விழிகள் கடிதம் போடும்
அதை இதயம் படித்து ரசிக்கும்
இது மௌன ராகமா? மயக்க வேதமா?
காதல் கேள்வி கேட்கும்..
(அடி அனார்கலி..)
கை ரேகைகளை இடையில் வைத்தாய்
உன் கண் ரேகைகளை ஹ்ம்ம்.. வைத்தாய்
உன் போராடும் இதழ் சூடாற என்
கண்ணங்களில் நீந்த வைத்தாய்
ஈரடி வரை தங்கத்தை வைத்தான்
அந்த மூன்றடிக்கு அவன் சொர்க்கத்தை வைத்தான்
பின்பு நாலடிக்கும் மிச்சம் ஐந்தடிக்கும் பிரம்மன்
வான் நிலவை வைத்து உன்னை செய்தான்
விலக்கு எதற்க்கு வேண்டும்
நாம் விளக்கம் காண வேண்டும்
அட மண்ணை சேரவே மழைக்கு எதற்கையா
பாலம் போட வேண்டும்
(அடி அனார்கலி..)
படம்: வருஷமெல்லாம் வசந்தம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், கங்கா
விரும்பி கேட்டவர்: நாமக்கல் சிபி
4 Comments:
இந்த பாட்டு கேட்கும்போதெல்லாம் சுஜாதாவின் பெருந்ந்தன்மைதான் ஞாபகம் வரும். ராஜ்குமார் இசைன்னாலே கண்டிப்பா சுஜாதாவுக்கு ஒரு பாட்டாவது இருக்கும். இந்த படத்தில் ராஜ்குமார் இரண்டு பாடல்கள் கொடுத்தார்.
ஆனால், சுஜாதாவோ இந்த பாடலின் ட்ராக்கை கேட்டதும் கங்காவுக்கு கொடுக்கலாமே. இந்த ட்ராக்குக்கு அவள் குரல் ரொம்ப பொருத்தமாக இருக்கும் & இசை உலகில் இன்னும் ஒரு நல்ல ப்ரேக் கிடைக்காமல் இருக்காங்க. இது அவங்களுக்கு ஒரு ப்ரேக் கொடுக்கும்ன்னு சொல்லி இந்த வாய்ப்பை கங்காவுக்கு கொடுத்தாங்க.
இந்த பாடல் நிச்சயமாக கங்காவின் இசை உலகில் ஒரு ப்ரேக்-ஆஅக அமைந்த பாடல்தான். கங்கா எந்த நிகழ்ச்சியில் பேசினாலும் இதை பற்றிதான் சொல்வார். :-)
அம்மா தாயே, அது "களி" இல்லே .. "கலி" ... அதாவது அனார்கலி!
//களி தின்னவன் said...
அம்மா தாயே, அது "களி" இல்லே .. "கலி" ... அதாவது அனார்கலி!
//
இப்போ திருத்தியாச்சுங்க. :-)
Thanks My Friend For This Song
Post a Comment