கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா
(கல்லெல்லாம் மாணிக்க)
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக்கண் அல்லவா
இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா
(கல்லெல்லாம் மாணிக்க)
கம்பன் கண்ட சீதை உன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின் பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி
(கல்லெல்லாம் மாணிக்க)
படம்: ஆலயமணி
பாடியவர்கள்: L.R.ஈஸ்வரி, T.M.சௌந்தராஜன்
Monday, January 28, 2008
220. கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
பதிந்தவர் இம்சை அரசி @ 3:05 PM
வகை 1960's, LR ஈஸ்வரி, TM சௌந்தர்ராஜன்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
நல்ல பாட்டுதான் அதுக்காக லூப்பில் போடுவதா? :-)
Post a Comment