Saturday, January 12, 2008

182. விழிகளின் அருகினில் வானம்





விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதன்முதல் அனுபவம் Oh yeah

ஒலியின்றி உதடுகள் பேசும்
பெரும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் Oh yeah

பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல Oh yeah

பூ போன்ற கன்னித் தேன்
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்
அது ஏன் என்று யோசித்தேன்
அட நான் எங்கு சுவாசித்தேன்
காதோடு மெளனங்கள்
இசை வார்க்கின்ற நேரங்கள்
பசி நீர் தூக்கம் இல்லாமல்
உயிர் வாழ்கின்ற மாயங்கள்
அலைகடலாய் இருந்த மனம்
துளித்துளியாய் சிதறியதே
ஐம்புலனும் என் மனமும்
எனக்கெதிராய் செயல்படுதே
விழி காண முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்
ஒரு மெளன புயல் வீசுதே
அதில் மனம் தட்டு தடுமாறும் Oh yeah

கேட்காத ஓசைகள்
இதழ் தாண்டாத வார்த்தைகள்
இமை ஆடாத பார்வைகள்
இவை நான் கொண்ட மாற்றங்கள்
சொல் என்னும் ஓர் நெஞ்சம்
இல்லை நில் என ஓர் நெஞ்சம்
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்
ஒரு போர்க்காலம் ஆரம்பம்
இருதயமே துடிக்கிறதா
துடிப்பது போல் நடிக்கிறதா
உரைத்திடவா மறைத்திடவா
ரகசியமாய் தவித்திடவா
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்
எனைக் கத்தி இல்லாமல் கொய்யும்
இதில் மீள வழி உள்ளதே
இருப்பினும் உள்ளம் விரும்பாது Oh yeah

(விழிகளின் அருகினில் வானம்)



படம்: அழகிய தீயே
இசையமைத்து பாடியவர்: ரமேஷ் விநாயகம்


விரும்பிக் கேட்டவர் : உதயா

2 Comments:

Anonymous said...

மிக்க நன்றி கப்பி பய...
can i know the meaning of ur name..

சினேகிதி said...

ithu enta fav songs la ondu!

Last 25 songs posted in Thenkinnam