Tuesday, January 8, 2008

176. உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி




உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாய் இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஓடமா?
(உயிரிலே..)

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கன்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்க்கை பாடமா?
இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?
(உயிரிலே..)

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல?
ஆன் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி
(உயிரிலே..)

படம்: வெள்ளித்திரை
இசை: GV பிரகாஷ்
பாடியவர்: நரேஷ் ஐயர்

2 Comments:

Anonymous said...

NOT TO PUBLISH

மை ஃபிரண்ட்
நன்றி.. நல்ல பாட்டுக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு. சில எழுத்துப் பிழைகள் உள்ளன. திருத்திய வரிகள்..


//கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளை//

//இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?//

//கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே//

//அது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும்
பழுதான தேரடி//

MyFriend said...

நன்றி அனானி.. திருத்தி விட்டேன்

இந்த லகர ரகர எழுத்துக்கள் இன்னும் பரிட்சயம் ஆகாமல் இரூக்கு எனக்கு. நன்றி. :-)

Last 25 songs posted in Thenkinnam