Thursday, October 9, 2008

753. நவீனம் - இரு கண்கள் பேசும் வேளை


Iru Kangal -

இரு கண்கள் பேசும் வேளை
காதல் சொன்ன வார்த்தை
காதலான ஆசைகள் உள்ளம் எங்கும் கூடுதே
உனை நானும் சேரும் காலம் என்று வந்து கூடுமோ
அந்த சொர்க்கம் காணவே மௌனமாகி தேய்கிறேன்

என் ஸ்வாசமே என் ஸ்வாசமே
ஒரு முறை தாலாட்டிட தென்றலாகி வா வா
என் ஸ்வாசமே என் ஸ்வாசமே
ஒரு முறை தாலாட்டிட வெண்ணிலவே நீ வா

உன்னில் என்னை காண்பதே
என்னில் உன்னை காண்பதே
காரணங்கள் கேட்ட போது நேசம் என்னிடம்
கூறுகின்ற வார்த்தையில் நான் அறிந்த சொந்தங்கள்
நூறு கோடி ஜென்மம் எந்தன் கண்ணில் தோன்றுதே
ஆ.....

ஒவ்வொரு துடிப்பும் உந்தன் ஸ்வாசமாய்
ஒவ்வொரு விழிப்பும் உந்தன் காணலாய்
மாற்றி சென்ற அந்த பெண்மை எந்த தேவதை?
எங்கு என்று நானும் தேட உன்னில் காண்கிறேன்
உன்னில் காண்கிறேன்... அவளை உன்னில் காண்கிறேன்
உண்மை காதலும் இன்று என்றும் மறைந்திடுமா?

நீ எங்கு சென்றாலும் நிலவாக நான் வருவேன்
இரவில் தோன்றும் அந்த மென்மையான நேரத்தில்

உன்னில் என்னை காண்பதே
என்னில் உன்னை காண்பதே
காரணங்கள் கேட்ட போது நேசம் என்னிடம்
கூறுகின்ற வார்த்தையில் நான் அறிந்த சொந்தங்கள்
நூறு கோடி ஜென்மம்
எந்தன் கண்ணில் தோன்றுதே

ஆல்பம்: நவீனம்
இசை: சசி Rogkwave
பாடியவர்: திலீப் வர்மன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam