காதல் பூக்கும் நொடியில் பேசடி பார்வையாலே
மாலை வேளை தினமும் தவிக்கிறேன் காதலாலே
உன்னாலே நான் கண்டேனே
உயிராலே நான் அணைத்தேனே
(காதல் பூக்கும்..)
நெஞ்சோடு நானே தாலாட்டுவேனே
என்னோடு நீ வந்தால் பெண்ணே
விழியோடு நானே உறவாகினேனே
முதல் பார்வை மறவேனே கண்ணே
ஓர் வார்த்தை சொல்லாமல் நீயும்
வழியொன்று தெரியாமல் நானும்
மழையில் குடையாக வந்தேன்
விழுந்தால் நிலமாக நின்றேன்
(காதல் பூக்கும்..)
கனவில்லை பூவே
நிஜம்தானே நீயே
நான் பாடும் புது ராகம் நீயே
சோகங்கள் இன்றே சுகமாகும் முன்னே
என்னை தீண்டி உறவாடு அன்பே
உன் ஜீவன் என் ஆயுள் அன்பே
உன் மூச்சில் நான் வாழ்வேன் இங்கே
இது போதும் இது போதும் நெஞ்சே
என் காதல் எங்கே நீ எங்கே
(காதல் பூக்கும்..)
படம்: ஆரம்பம்
பாடியவர்: திலீப் வர்மன்
Wednesday, October 8, 2008
751. ஆரம்பம் - காதல் பூக்கும் நொடியில் பேசடி பார்வையாலே
பதிந்தவர் MyFriend @ 2:26 AM
வகை 2008, திலீப் வர்மன், மலேசியா
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
அனு இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனசுக்குள் மழையடிக்கும் எனக்கு.....இந்தப் பாடலின் MP3 இருந்தால் கொடுத்துதவ முடியுமா?
இன்று தான் பாடலை கேட்கின்றேன்..மறுபடி கேட்டுவிட்டு வருகின்றேன்..
@புனிதா:
இந்நேரம் உங்க ஈமெயிலில் வந்திருக்கும். நீங்களும் ரசித்துக்கொண்டிருபீர்கள் என நினைக்கிறேன். :-)
@தூயா:
கண்டிப்பா. :-)
Post a Comment