Saturday, October 4, 2008

740. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல




மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

யானைப் படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு...
வாழப் பிறந்தாயடா

தங்கக் கடிகாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

நதியில் விளையாடி கொடியின் தலை சீவி
நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
கதை சொல்லவா..
பிரித்த கதை சொல்லவா

கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அன்பே ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராராரிரோ
அன்பே ஆரிராரிரோ..அன்பே ஆரிராரிரோ

படம்: பாசமலர்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

விரும்பி கேட்டவர்: மங்கை

3 Comments:

ஆயில்யன் said...

//சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
கதை சொல்லவா..
பிரித்த கதை சொல்லவா//


அருமையான வரிகள்!

ஆயில்யன் said...

/ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அன்பே ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராராரிரோ
அன்பே ஆரிராரிரோ..அன்பே ஆரிராரிரோ//

இது சூப்பரூ! :)))

ஆயில்யன் said...

//கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா///

:)

Last 25 songs posted in Thenkinnam