Tuesday, October 21, 2008

761திரை மொழியாளுனர் ஸ்ரீதர் அஞ்சலி



திரை மொழியாளுனர் ஸ்ரீதர் அஞ்சலி

நேற்று 20.10/2008 அன்று காலை 10 மணியளவில் பழம்பெரும் திரை பட இயக்குநர் ஸ்ரீதர் காலாமானார். அன்னாரின் நினைவுகள் அனைத்து இசைப் பிரியர்களின் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கலந்தவை. அவரைப் பற்றி ஓர் சிறிய ஒலிக்கோப்பு இவை.

திரை உலகில் ஓர் திருப்பத்தை ஏற்படுத்திய இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் படப்பாடல்களில் யாரும் மனதை லயிக்காமல் இருக்க முடியாது அவரின் படைப்புக்கள் அனைவரின் உள்ளத்தையும் ஆக்கிரமித்தவை. ரசிகர்களீன் கண்களில் கண்ணீரை வரவழைத்தவர் இவர் ஒருவராக இருக்க முடியும். இதோ நேற்று பண்பலையில் இனிய இரவில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நமது ”டிஜ்ஜிடல் குரலோன்” அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களீன் அமைதியான குரலில் அவரின் படைப்பாக கோவை ரசிகர்கள் சார்பாக ஒட்டு மொத்தமான அஞ்சலியாக இயக்குநர் ஸ்ரீதரின் பழைய பாடல்கள ஒலிப்பரப்பி பண்பலையின் நேயர்களின் ஒட்டு மொத்த உணர்வுகளையும் உசுப்பிவிட்டார். நேற்று இரவு கேட்ட அனைவரின் கண்களூம் கலங்கியிருக்கும் என்பது உண்மை. அவரைப் பற்றி அதிகம் எழுத விருப்பம். இருந்தாலும் ஏதோ ஒரு வித அழுத்தம் மனதை அழுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் ஒலிக்கோப்பில் அவரின் ஆக்கத்தையும் கேட்டுவிட்டு உங்கள் அஞ்சலிகளையும் தெரிவியுங்கள்.




இந்த ஒலிக்கோப்பை அவரின் அஞ்சலியாக ஒலிப்பரப்பிய சூரியன் பண்பலை நிறுவனத்தாருக்கும், ”டிஜ்ஜிடல் குரலோன்” அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயான அவருக்கும் பெரிதும் உதவியாக இருந்த திரு. ரவிவர்மா அவர்களூக்கும், கோவை எஸ்.பி.பி ரசிகர்கள் சார்பாகவும், தேன்கிண்ணம் பதிவாளர்கள், நேயர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன். இயக்குநர் ஸ்ரீதர் அவரின் ஆன்மா சாந்தியடையவும் அண்ணாரின் குடும்பத்தாருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இசைப்பிரியர்கள்
கோவை ரவி, கோவை எஸ்.பி.பி ரசிகர்கள், மற்றும் தேன்கிண்ணம் இசைப்ப்ரியர்கள்.

ஒலிக்கோப்பில் மனதை கலங்கடிக்கும் பாடல்கள்.

1. ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன்
2. காதலிலே தோல்வியுற்றாள்
3. சொன்னது நீதானா
4. மலரே மலரே தெரியாதோ
5. நெஞ்சம் மறப்பதில்லை
6. ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
7. கண்ணீலே நீர் எதற்க்கு
8. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.

Get this widget | Track details | eSnips Social DNA

9 Comments:

G.Ragavan said...

மறைந்த இயக்குனர் ஸ்ரீதருக்கு அஞ்சலி. அவருடைய ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வேண்டுகிறேன். அவரை இழந்து தவிக்கும் சுற்றத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் அனுதாபங்கள்.

இந்த பொழுதில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தப் பாடல் தொகுப்பை வெளியிட்டமை பொருத்தமானது.

Bee'morgan said...

இயக்குனர் ஸ்ரீதருக்கு என் இறுதி அஞ்சலிகள்..
இந்த பாடல்களை யெல்லாம் ஒவ்வொரு முறை கேட்கும் போதும், ஏதோ ஒரு சொல்லவொணாத உணர்வு மனதில் எழுவதுண்டு.. அருமையான தொகுப்பு.. பகிர்ந்தமைக்கு நன்றி.. இன்னும் ஒரு அற்புதமான பாடல் ஒன்று இருக்கு.. "ஒரே நாள் உனை நான்" ..

Anonymous said...

வாங்க ஜி.ரா.சார்,

/இந்தப் பாடல் தொகுப்பை வெளியிட்டமை பொருத்தமானது.//

ஆமாங்க.. பல ஒலிக்கோப்புக்கள் தேன்கிண்ணத்தில் பதிவிற்க்காக காத்திருக்கும் போது திடிரென்று ஒலிப்பரப்பிய ஸ்ரீதர் சாரின் மரணச்செய்தி என்னை என்னவோ செய்துவிட்டது. ஒலிக்கோப்பு கேட்டவுடனே ஒலிப்பதிவு செய்து நம் இணைய தோழர்களூக்காக பதிவில் ஏற்றிவிட்டேன். நமக்காக ஸ்ரீதர் சார் எவ்வளவோ பாடல்கள் தந்துள்ளார் நம் மனதை அமைதியாக்கியிருக்கிறார். இசைப்பிரியர்களான நம்மாளான சிறிய அஞ்சலி தான் இவவை. உங்கள் உணர்வுகளை தெரியப்படுத்தியதற்க்கு நன்றி.

பீமாரங் சார்..

வணக்கம்.. நீங்க சொன்ன மாதிரி
//இன்னும் ஒரு அற்புதமான பாடல் ஒன்று இருக்கு.. "ஒரே நாள் உனை நான்" ..//

என்னவொடு அழகான் இனிமையான பாடல் இது. நீங்க சொன்னப் பிறகு தான் எனக்கே நினைவிற்க்கு வந்தது. இந்த பாடலை சீக்கிரம் பா.நி.பா தளத்தில் பதிய வேண்டும். வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க நிறைய பழைய பாடல்கள் தொகுப்பு உங்களூக்காக காத்திட்டிருக்கு.

Bee'morgan said...

கரும்பு தின்னக் கூலியா..? நிச்சயம் வருகிறேன்.. :)

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

Really it was memorable evening i had few months back at chennai . It was the Sridhar Hits - Orchaestrated by Y.G.Mahendra . Our Jumbo florished in that concert with his Great songs includes Santhanam poosum manjal nilavil from Thudikum karangal , Pani vizhum malarvanam from Ninaivellam Nithya , Ennadi meenakshi from Illamai oonjal adugirathu and few more . Sridhar was brought on the wheel chair and Director cheran was very emotional that day . Our jumbo too enjoyed singing Sridhar's hits as he is the one to give Music opportunity to Our SPB to score for his film Thudikum Karangal starred by Super star . Those days Our SPB is not known for His music and he is known only for his Mesmerrsing voice . Still Sridhar had great confident on him and gave that opporutnity , which had very gud numbers including Santhanam poosum , Megam munthanai and many .Really it's a great loss . Let us all pray Almighty for the soul to rest in peace .

Luv and Live with Music
Prasan, Chennai.

Anonymous said...

Hai Prasan,

First, I welcome to this blog.

//Sridhar was brought on the wheel chair and Director cheran was very emotional that day . //


Prasan not only Cheran We also very emotioanal now days. And we too pray Almighty for the soul to rest in peace.

SP.VR. SUBBIAH said...

அவருடைய படங்களில் பாடல்கள் நன்றாக இருக்கும்.
கல்யாணப்பரிசில் பட்டுக்கோட்டையாரும், அதற்குப் பிறகு வந்த படங்களில் கவியரசரும் ஆக்கம் செய்தவைகள் அவைகள்.
அந்தப் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்துப் படமாக்கிய பெருமை இயக்குனரையே சேரும்!

Anonymous said...

Dear Mr Prasanna,

Director Sridhar's demise jolted everyone, that too lovers of good songs. He is a person of having a wide knowledge about good music. That is the reason for the alltime hits of songs in his movies. (Right from Thulladha manamum thullum (sung by Ms.Jikki??) to Sandhanam poosa majal nilavum...via. ..Kinnathil then eduthu and Orey naal and pani vizhum malarvanam) Actor Vikram, it seems, was introduced by Sridhar only. Vikram was very helpful to him when Director Sridhar was bedridden. Let the soul rest in piece.
With love
K.SRIDHAR

Last 25 songs posted in Thenkinnam