ஒரு பார்வை பார்க்கும்போது
உன் காதல் எதிர்ப்பார்த்தேன்
உன் விழியில் என் உருவம் பார்த்துவிட்டேன்
அன்பே ஏன் ஏங்குகிறாய்
உன் காதலை சொல்லிவிடு
(உன் விழியில்..)
மறைக்கின்ற காதல் மலராதம்மா
சொல்லாத காதல் வாழாதம்மா
துணிந்து நின்று சொல்லிவிடு காதல் வாழ்கவே
துணிந்து நின்று சொல்லிவிடு தூய்மையாகவே..
(உன் விழியில்..)
காதல் வருவது தவறு அல்ல
ஜாதி வேதமும் பார்ப்பதல்ல
உள் மனதை நீ பூட்டி வைத்தால்
யாருக்கும் அதனால் லாபம் அல்ல
சின்ன விழி பூ மானே
உன் காதலை சொல் மானே
சின்ன விழி பூ மானே
உன் காதலை சொல் மானே
மனதை திறந்து சொல்லிவிடு உந்தன் காதலே
மனதை திறந்து சொல்லிவிடு உந்தன் காதலே
(உன் விழியில்..)
இருபது வயதிலும் வாருமம்ம்மா
அறுபது வயதிலும் சீண்டுமம்மா
காதல் வயதை பார்ப்பதல்ல
மனமே சேர்ந்தால் போதுமம்மா
காதல் கொண்ட தேவியே
உன் மனதை தா இங்கே
காதல் கொண்ட தேவியே
உன் மனதை தா இங்கே
மனதை திறந்து சொல்லிவிடு உந்தன் காதலே
துணிந்து நின்று சொல்லிவிடு தூய்மையாகவே
(உன் விழியில்..)
ஆல்பம்: செல்வா The Gift
இசை: Rogkwave
பாடியவர்: சசி Rogkwave
விரும்பி கேட்டவர்: விக்னேஷ்வரன் அடைக்கலம்
Monday, October 6, 2008
747. செல்வா The Gift - உன் விழியில் என் உருவம் பார்த்துவிட்டேன்
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
மண்வாசனையை தேன்கிண்ணத்திலும் நுகர்ந்து செல்வதற்கு வாய்ப்பளித்த அனுவிற்கு நன்றி!!
சசி பாடிய இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடலாகும்!!!
நன்றிங்கோ...
திலகாவ பற்றி ஒன்னும் சொல்லயா?
@புனிதா:
கேட்கும் உங்களுக்கு பிடிச்சிருந்தா இந்த மாதிரி நிறைய செய்வோம் புனிதா. :-)
@விக்னேஷ்:
//திலகாவ பற்றி ஒன்னும் சொல்லயா?//
நீங்க சைட் அடிக்கிறதுக்கு என்னால பதிவு போட்டு ஹெல்ப்தான் பண்ணமுடியும்.. உங்களுக்காக நானே போய் சைட் அடிக்க முடியுமா? சொல்லுங்க விக்னேஷ். ;-)
மக்களே, இது என்ன கதைன்னு கேட்குறவங்களுக்கு, இந்த க்ளிப்ல வர்ற பொண்ணு பேர் திலகா. நம்ம விக்னேஷ் ஒரு காலத்துல ஜொல்லு விட்ட பொண்ணு. இப்போ அவருக்கு மலரும் நினைவுகள் எல்லாம் வருதாம் இந்த பாடலை பார்த்து.. (இந்த பாடல் இதுக்காகவே போட சொல்லி கேட்டது தனி கதை மக்களே..)
Post a Comment