உன் தலை முடி உதிர்வதை கூட
தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினை கூட
ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே
மேகம் கண்ணீரை சிந்துதே
உன்னை நான் சேரவே
பூமி என்னோடு சுற்றுதோ
(உன் தலை..)
உச்சந்தலை மீது நீ கொடுக்கும் முத்தம்
உயிரின் மீது பட்டு தெறிக்கும்
கைகள் பற்றிக் கொண்டே
பேசிக்கொள்ளும் நேரம் இருக்கும்
எதிர் வரும் காற்று
உன் பெயரை என் மேல்
தினமும் கிறுக்கி விட்டு போகும்
நெற்றி பொட்டுக்குள்ளே கொத்திவிட்டு என்னை மோதும்
உன் கண்ணில் பட்ட பூவை
கூந்தலுக்குள் வைப்பேன்
காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன்
கையில் பட்ட என்னை உன் இதயத்தில் வைப்பேன்
என்னை கொடுப்பேன்.. ஓஹோ..
(உன் தலை..)
நீயும் என்னை நித்தம் சேர வேண்டும் என்று
தொலைந்து போக கொஞ்சம் ஆசை
நான் அணைத்து தூங்கும் மீசை
வைத்த பொம்மை நீயே
நெஞ்சில் நிலமாக விழுந்து கிடக்கின்றேன்
தேய்ந்துக் கொள் என்னை முழுதும்
தொட்டு நின்று தூங்கும்
என் பார்வை எந்தன் முத்தம் தினமும்
உன்னை பற்றி எழும் காதல் கொடி நானே
உன் கையெலுத்தை தாங்கும் காகிதம் நானே
உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே
எந்தன் உயிரே.. ஓஹோ
(உன் தலை..)
படம்: காதல் விழுந்தேன்
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்கள்: கார்த்திக், நிதீஷ் கோபாலன், மாயா
Saturday, November 1, 2008
765. காதலில் விழுந்தேன் - உன் தலை முடி
பதிந்தவர் MyFriend @ 12:18 PM
வகை 2000's, 2008, கார்த்திக், நிதீஷ் கோபாலன், மாயா, விஜய் ஆண்டனி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment