Saturday, November 22, 2008

789.சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா!

சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா!
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா நீ எண்ணிப் பாரடா!( சின்னப்பயலே)

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி! (2)
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ
தரும் மகிழ்ச்சி! (2)

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி - உன்
நரம்போடு தான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி! --- (சின்னப்பயலே)

மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா - தம்பி
மனதில் வையடா!
வளர்ந்து வரும் உலகத்துக்கே - நீ
வலது கையடா - நீ
வலது கையடா!

தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா! நீ
தொண்டு செய்யடா! (தனிமையுடமை)
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா - எல்லாம்
பழைய பொய்யடா!

வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு (வேப்பமர)
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க - உந்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க!

வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை (வேலையற்ற)
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே! நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே! நீ
வெம்பி விடாதே!
விரும்பிக்கேட்டவர் : யட்சன்
திரைப்படம் : அரசிளங்குமரி
பாடியவர்: டி எம் சௌந்திரராஜன்
எழுதியவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசையமைத்தவர்: ஜி .ராமனாதன்.

3 Comments:

Unknown said...

முத்துலெட்சுமி-கயல்விழி,

நந்தா என் நிலா (படம்-நந்தா என் நிலா) இசை வி.தக்ஷினாமூர்த்தி

கங்கை நதியோரம் (வரப்ரசாதம் -இசை கோவர்தன் )

அன்பு மேகமே இங்கு ஓடி வா (எங்கம்மா சபதம் -விஜய பாஸ்கர் )

கேட்டிருக்கிறீர்களா?

“நந்தா என் நிலா” அட்டகாசம்.மது வந்தி ராகத்தில்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி தமிழன்..
-------------
நன்றி ரவிசங்கர்..நான் அந்த பாடலைக் கேட்டதில்லை. இணையத்தில் தேடிக்கேட்கிறேன்.

யட்சன்... said...

நன்றி கவி.முத்துலட்சுமி....

:)

ரவிஷங்கர் குறிப்பிட்ட பாடல்கள் அனைத்துமே...அருமையான பாடல்கள்..கேட்டுப்பாருங்கள்..கிறங்கிப் போவீர்கள்...

முடிந்தால் அந்த பாடல்களை வலையேற்றுங்கள்.....

Last 25 songs posted in Thenkinnam