Tuesday, November 25, 2008

796. சின்ன மணிக்குயிலே




சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி
நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம
கேட்டாக்கா பதிலும் சொல்லாம
கூக்கூ எனக் கூவுவது ஏனடி
கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே
சொல்லாத சைகையிலே நீ ஜாடை செய்கையிலே
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கை சேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உள்ள கனத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

(சின்ன மணிக்குயிலே)


பட்டுத் துணி உடுத்தி உச்சி முடி திருத்தி
தொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள
உன் சேலை காற்றில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பார்த்து என் எண்ணம் கூத்தாட
மாராப்பு சேலையில நூலைப் போல நானிருக்க
நான் சாமியை வேண்டுறேன் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

(சின்ன மணிக்குயிலே)

படம்: அம்மன் கோயில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam