அழகாகக் சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ
மழைக்காலத்தில் லாலலாலலா
நிழல் மேகங்கள் லாலலாலலா
மலையோரத்தில் லாலலாலலா
சிறு தூரல்கள் லாலலாலலா
இளவேனில் காலம் ஆரம்பம்
லாலலாலா லாலலாலா
(அழகாகக் சிரித்தது..)
நதியே நீராடத்தான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்
நாணல் நானாகத்தான் காத்துக்கிடந்தேன்
காற்றே உனை பார்த்ததும் கை சேர்த்தேன்
மானே உன் அழகினில் நானே ஓவியம் வரைந்தேனே
கண் ஜாடை சொல்ல
நானே என் இதயத்தை தானே எடுத்துக் கொடுத்தேனே
நீ சொந்தம் கொள்ள
பனி தூங்கும் ரோஜாவே
எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள் இதுதான் வரவோ
நாணம் என்ன அச்சம் என்ன
(அழகாகக் சிரித்தது..)
உன்னை நான் அள்ளவோ கண்ணில் வரைந்தேன்
நாளும் என் ஓவியம் நீதானே
கண்ணே உன் கண்ணிலே சேதி படித்தேன்
காதல் போராட்டமே நான் பார்த்தேன்
மோகம் பொங்கி வரும் தேகம் கொண்டதொரு தாகம்
நான் பெண்ணல்லவோ
நானும் கொஞ்சிட அதும் தீரும் கட்டிலில் இணை சேரும்
என் கண்ணல்லவா
இள மாலை பொழுதாக
இரு நெஞ்சம் இனிதாக
இனிமை வழியும் இளமை இதுவோ
இரு விழி சிவந்திட
(அழகாகக் சிரித்தது..)
படம்: டிசம்பர் பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜெயசந்திரன், S ஜானகி
Sunday, November 23, 2008
791. அழகாகக் சிரித்தது அந்த நிலவு
பதிந்தவர் MyFriend @ 12:12 AM
வகை 1980's, S ஜானகி, இளையராஜா, ஜெயசந்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment