நான் தேன்கிண்ண தேனியாய் ஆகி ஒரு வருடம் இன்றோடு பூர்த்தியாகிறது. இது தேன்கிண்ணத்தின் 800-வது பாடலும் கூட.
ரஹ்மானின் அருமையான இசையில், ஒரு சூப்பரானா பாடலுடன் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.
நட்புடன்,
.:: மை ஃபிரண்ட் ::.
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அன்னை
தூய உருப்பளிங்கு போல் வழ என்
உள்ளத்தினுள்ளே இருப்பவள் இங்கு
வாராது இடர்
படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமல் பூந்தாமரை போற்கையும்
துடி இடையும்
அல்லும் பகலும் அனவரதம்
துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி
தானனா தானனன தன்னன்னானா
தான தான நானா தான நானா தன்னன்னானா
தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனைஎத்தனை தடையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
எத்தனை சபைகள் கண்டோம் எத்தனை
எத்தனை தடையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
இது மக்கள் பாட்டு தன்மானப்பாட்டு
இது போராடும் உங்கள் வாழ்கைப்பாட்டு
கல்லூரிப்பெண்கள் பாடும் கன்னிப்பாட்டு
சபைகளை வென்றுவரும் சபதம் போட்டு
நாம் கட்டும் பாட்டு ஈரம் சொட்டும் பாட்டு
கட்டிச்செந்தேனாய் நெஞ்சில் கொட்டும் பாட்டு
தாய்ப்பாலைப்போல் ரத்தத்தில் ஓட்டும் பாட்டு
தமிழ்மக்கள் வீட்டைச்சென்று தட்டும் பாட்டு
மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க
நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க
நம் பூமி மேலே புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க
மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
எத்தனை சபைகள் கண்டோம் எத்தனைஎத்தனை தடையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
ச சநிதப ப பமகரி கரிநி சம சப சநி பம கரிச
சக ரிக மநி பம கமப
பச நித மப
சம கரி நிச
கம பம ப
நி ச க ரி ச
ச ரி த ப
க ரி நி ச
ம ப நி
க ரி ச
ப நி க ம
ப ம க ரி ச நி த ப
ச ரி க ம ப த ப ச நி ச க ரி ம க ரி ச
க ரி ச நி ச நி த ப
ப ச நி த ப க க ரி
க ரி க ப ம த ப ச
க ரி ச நி த ரி ச நி த ப
க ரி க ம
ப த ம ச ச
ப த ம க க க
ச ம க ரி ரி
ச நி த ப ப ப
ச க ரி ச
க ரி நி ச ச ச
ம க ரி
ப நி ச நி ப
க ரி க ம ப
படம்: டூயட்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், P சுசீலா
வரிகள்: வைரமுத்து
Tuesday, November 25, 2008
800. தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
பதிந்தவர் MyFriend @ 4:20 PM
வகை 1990's, AR ரஹ்மான், P சுசீலா, SP பாலசுப்ரமணியம், வைரமுத்து
Subscribe to:
Post Comments (Atom)
15 Comments:
வாவ்.. வாழ்த்துக்கள் :)
சீக்கிறமே 1000 அடிங்க.. :)
தேனீயாகவே மாறி பலபல பாடல்களை சேகரித்த மைப்ரண்ட் ..பாராட்டுக்கள் பல ...
தட்டுப்பாடே இல்லை நம்ம தமிழ்பாடல்களுக்கு.. நீ அடிச்சு தூள் செய்யும்மா..
வாழ்த்துக்கள்:):):)
வேணும்னா உங்கள வாழ்த்தி ஒரு பாராட்டுக் கவுஜ எழுதவா:):):) (வன்முறை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு)
வாழ்த்துக்கள் மைபிரண்ட் ;)
அடேங்கப்பா, ஒரு பேச்சுக்கு சவால் விட்டா 800 வரைக்கும் போயிட்டீங்களா? சரி இன்னொரு சவால் அடுத்த வருஷத்துக்குள் 2000 பாட்டு போடணும் ஒகேவா?
வாழ்த்துக்கள் தேனீக்களே!
//ச சநிதப ப பமகரி கரிநி சம சப சநி பம கரிச
சக ரிக மநி பம கமப
பச நித மப
சம கரி நிச
கம பம ப
நி ச க ரி ச
ச ரி த ப
க ரி நி ச
ம ப நி
க ரி ச
ப நி க ம
ப ம க ரி ச நி த ப
ச ரி க ம ப த ப ச நி ச க ரி ம க ரி ச
க ரி ச நி ச நி த ப
ப ச நி த ப க க ரி
க ரி க ப ம த ப ச
க ரி ச நி த ரி ச நி த ப
க ரி க ம
ப த ம ச ச
ப த ம க க க
ச ம க ரி ரி
ச நி த ப ப ப
ச க ரி ச
க ரி நி ச ச ச
ம க ரி
ப நி ச நி ப
க ரி க ம ப
//
சான்ஸே இல்ல
பாஸ் நீங்க அடிச்சு ஆடுங்க பாஸ்!
//கானா பிரபா said...
வாழ்த்துக்கள் மைபிரண்ட் ;)
அடேங்கப்பா, ஒரு பேச்சுக்கு சவால் விட்டா 800 வரைக்கும் போயிட்டீங்களா? சரி இன்னொரு சவால் அடுத்த வருஷத்துக்குள் 2000 பாட்டு போடணும் ஒகேவா?
///
ஜுஜுபி!
கண்ணா (கானா) டார்கெட் மாத்தி கொடுப்ப்பா!
//பாஸ் நீங்க அடிச்சு ஆடுங்க பாஸ்!//
ஆமாம் பாஸ்! நீங்க அடிச்சி ஆடுங்க!
Congrats!
congrats.
keep going :)
பட்டையக் கிளப்புங்க! :))
SuPerB... SuPerB .. SuPerB.. மைப்ரண்ட் அவர்களே.. தேன்கிண்ணத்துல நம்ம தல பத்தி அடக்கி வாசிக்கலாம்னா வலிய கட்டாயமா இழுத்து விடுறீங்களே. அழகான பாடல் அருமையான பதிவு அட்டகாசமான முயற்சி. வாழ்த்துக்கள் லேட்டா வந்தாலும் நம்ம பாலுஜி எப்பவுமே லேட்டஸ்ட் தான் (ஹி.. ஹி..)
கானா சார்,(அடுத்த வருசத்துல 2000ம்மாஆஆஆ) வேற வேலை செய்யவேண்டாம்ங்கறீங்க வீட்டுக்கு அனுப்பிச்சுடுவாங்க.
ரொம்பவே சுறுசுறுப்பான தேனீ நீங்க தான் ;)
Post a Comment