Saturday, November 22, 2008

788. காட்டு குயில் பாட்டுச் சொல்ல





காட்டு குயில் பாட்டுச் சொல்ல
வீட்டுக் கிளி கேட்டுக் கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டுக்கிளி நானுமே
(காட்டு குயில்..)

மனசுல திறந்தது மணிக்கதவு
மரகத பதுமையை இனி தழுவு
இடையில விழுந்தது இளமனசு
இனிக்கிற சுகமது பல தினுசு
நாளெல்லாம் ராகம் பாடுதே தேகம்
வாழ்வெல்லாம் யோகம் வாழ்த்துதே யாவும்
விதவிதமா விருந்து வச்சு
விழி வழியே மருந்து வச்சு
விரல் தொட அதில் பல சுகம் வரும் பொழுதாச்சு
(காட்டு குயில்..)

விழியிலே தெரியுது புதுக் கணக்கு
விடியிற வரயினில் அது எனக்கு
தடைகளை கடந்தது மலை அருவி
தனிமையில் மறந்தது இளங்குருவி
தேகமே தேனா தேடினேன் நானா
மோகம்தான் வீணா மூடுதே தானா
தொடத்தொடத்தான் தொடர்கதையா
பட படத்தான் பல சுவையா
அடிக்கடி மயங்குற வயசிது தெரியாதா..
(காட்டு குயில்..)

படம்: சின்ன மாப்பிள்ளை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா

1 Comment:

Sathish Chandran said...

பாடலை பாடியவர் மனோ !..

Last 25 songs posted in Thenkinnam