ஒரு பெண் புறா
கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ
சுமை தாங்கியே சுமை ஆனதே
எந்தன் நிம்மதி போனதே
மனம் வாடுதே
ஒரு பெண் புறா
கட்டாந்தறையில் ஒரு துண்டை விரித்தேன்
கண்ணில் தூக்கம் சொக்குமே அந்து அந்த காலமே
மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லே அது இந்த காலமே
என் தேவனே தூக்கம் கொடு
மீண்டும் அந்த வாழ்க்கை கொடு
பாலைவனம் கடந்து வந்தேன்
பாதங்களை ஆறவிடு
(ஒரு பெண்..)
கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா
அன்று பாடம் படித்தேன் அது அந்த காலமே
குஞ்சு மிதித்து ஒரு கோழி வாடுதே
இதௌ நெஞ்சில் நிறுத்து இது இந்த காலமே
ஆண் பிள்ளையோ சாகும் வரை
பெண் பிள்ளையோ போகும் வரை
விழி இரண்டும் காயும் வரை
அழுதுவிட்டேன் ஆனவரை
(ஒரு பெண்..)
படம்: அண்ணாமலை
இசை: தேவா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: வைரமுத்து
Sunday, November 23, 2008
792. ஒரு பெண் புறா...
பதிந்தவர் MyFriend @ 4:18 AM
வகை 1990's, KJ ஜேசுதாஸ், தேவா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment