Wednesday, November 26, 2008

801. வானுயர்ந்த சோலையிலே





வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நா வறண்டு பாடுகின்றேன்

(வானுயர்ந்த சோலையிலே)

வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாடியென்று பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை

(வானுயர்ந்த சோலையிலே)


ஆற்றங்கரை ஒரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடி வைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதையானதடி

(வானுயர்ந்த சோலையிலே)


படம்: இதயக்கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

1 Comment:

நாகை சிவா said...

//ஆற்றங்கரை ஒரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடி வைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதையானதடி//

மிகவும் பிடித்த வரிகளில் ஒன்று.

பகிர்ந்தமைக்கு நன்றி கப்பி...

Last 25 songs posted in Thenkinnam