ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது ஆஆஆஆ
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
படம்: தில்லு முல்லு
இசை: MS விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
Friday, November 14, 2008
777. ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
பதிந்தவர் MyFriend @ 5:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
கண்ணதாசன், MSV, எஸ்.பி.பியின் கூட்டணியில் உருவான அருமையான பாடல்!!அந்த வரிகளுக்காகவே மீண்டும் மீண்டும் கேட்கலாம்!!!
Post a Comment