Tuesday, November 4, 2008

771பவர்புல் பேஸ் பி.பி.ஸ்ரீனிவாஸ்



தேன்கிண்ணம் அன்பு சுவைஞர்களுக்கு, தமிழ்மண பதிவாளர்கள் அனைவராலும் வாத்தியார் என்று அன்பாக போற்றப்படும் நமது பல்சுவை தளத்தின் முதலாளி திரு.எஸ்.வி.ஆர். சுப்பையா அவர்கள் ஒரு பதிவில் எப்படி பதிவிற்க்கு தலைப்பு தருவது என்றும் அதனால் என்ன பயன் என்றும் எழுதியிருந்தார். அவை எத்தனை உண்மை என்று பல பதிவுகளில் நான் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால். நான் எனது வானொலி நண்பர்கள் ஆக்கங்களாக ஒலிக்கோப்புக்களை எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிந்து வருகின்றேன். அந்த ஒலிக்கோப்புக்களூக்கு எப்படி அழகான தலைப்பை தருகிறார் பொருத்தமாக வானொலி அறிவிப்பாளர் ”டிஜ்ஜிட்டல் குரலோன்” திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயாணா தருகிறார் என்று பல தடவை வியந்துள்ளேன். ஆக்கங்களூக்கு மிகவும் சாதாரணமாக தான் தலைப்பு தருவார். அதுவே அசத்தலாக இருக்கும். இதோ அந்த வகையில் இந்த பதிவின் ஆக்கமும் பெயர் வைத்துள்ளார். அந்த தலைப்பிலேயே இந்த பதிவு நேற்று (3.11.2008) அன்று வழக்கம் போல் இனிய இரவில் பண்பலையில் திரு. ஆர்.ஜி.எல்.என் சார் அவர்கள் “பவர்புல் பேஸ் பி.பி.எஸ்” என்ற தலைப்பில் பிரபல மூத்த பிண்ணனி பாடகர் திரு. பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் பேட்டியுடன் அவர் பாடிய அமிர்தமான பாடல்களை ஒலிப்பரப்பினார் அதுவும் அவர் விவரித்த பாடல் விளக்கங்களூடன் அந்த இரவு எனக்கு மிகவும் இனிமையாக இருந்தது. ஏன் இனிய இரவு ரசிகர்கள் அனைவருக்கும் தேனில் பலாசுளைகளை முக்கி எடுத்து சுவைத்தது போல் இருந்திருக்கும். என்னென்ன பாடல்களில் தன் அனுபவங்களை திரு. பி.பி.எஸ் அவர்கள் தன் குரலால் விளக்கினார் என்று நீங்களே கேட்டு விடுங்களேன். பாடல் லிஸ்ட் எவை என்று நீங்கள் ஆவலுடன் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது சஸ்பென்ஸ்..

திரு. பி.பி.எஸ் அவர்கள் பலதடவை அடிக்கடி மேடைகளீலும் பேட்டிகளிலும் சொன்னது தான் இது. ”MUSIC” என்ற எழுத்தில் முதலில் வரும் ”M - Melody” ஐ நீக்கிவிட்டல் ”U- SIC” என்று வரும். அந்த விளக்கம் எவ்வளவு உண்மை என்று இந்த ஒலிக்கோப்பை கேட்டு விட்டு சொல்லுங்கள். ஆமாம் நண்பர்களே இசையில் இனிமையை (மெலொடியை) நீக்கி விட்டால் எதுவும் இல்லை தான். பாடல்கள் யார் பாடினாலும் இதுதான் உண்மை.



பவர்புல் பேஸ் பி.பி.எஸ் அவர்களூக்கு தன் இனிமையான கம்பீரமான குரலில் வர்ணனை செய்து அவருக்கு மரியாதை செய்திருக்கும் அறிவிப்பாளருக்கும், அதற்க்கு துணையாக இருந்த அனைத்து அறிவிப்பாளர்களூக்கும் ஒட்டு மொத்தமாக இனிய இரவு ரசிகர்கள் சார்பாகவும், தேன் கிண்ணம் ரசிகர்கள் சார்ப்பாகவும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஒலிக்கோப்பை கேட்டு விட்டு ஆக்கத்தை உருவாக்கிய அறிவிப்பளர்களூக்கு தங்கள் உணர்வுகளை நன்றியாக தெரிவியுங்கள் நண்பர்களே..

குறிப்பு: காற்றலையில் பதிவாக செய்ததால் நண்பர்கள் ஒலியின் அளவை கூட்டி வைத்துக்கொள்ளலாம்.

Get this widget | Track details | eSnips Social DNA

4 Comments:

Anonymous said...

Dear Ravee sir,

This link is working perfect and the contents are fantastic.

Thanks and Regards,
Tha.Vu.Udhayabhanu

Anonymous said...

Dear Udhaya Banu sir,

First Comment from you sir. I am very happy saw ur comment here. More and more audio file will come here for another senior singers songs. Thx for your lovable comments.

Kovai SPB fans said...

Dear Ravee sir,

Excellent songs. Thanks for ur link.

Anonymous said...

Hello Geetha madam

Thanks for your comments. A lot of old and latest songs will come here. pls visit regularly.

Last 25 songs posted in Thenkinnam