இருபது வருடங்களுக்கு முன் ஆல் இந்தியா ரேடியோவில் அடிக்கடி நாடக விழாக்கள் நடத்துவார்கள் இப்போது இருக்கிறது என்று நினைக்கிறேன். அப்போது சில நல்ல நாடகங்கள் இரவு நேரங்களில் ஒலிப்பரப்புவார்கள். இப்போது தான் இந்த மாதிரி வ்ரலாற்று நாடகம் பண்பலையில் முதல் தடவையாக இனிய இரவு நிகழ்ச்சியில் கேட்கிறேன். ஒரு மணி நேரம் குறும்படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது. ஒரு சினிமாவில் எப்படி பாடல்கள் 5 அல்லது 6 பாடல்கள் இருக்குமோ அது போல் இந்த வானொலி நாடகத்திலும் பழைய பாடல்கள் கதைக்கு தகுந்தாற் போல் தேர்ந்தெடுத்து வழஞ்கியிருக்கிறார்கள். ஆமாம் இணைய நண்பர்களே.
”பல்லவ மன்னன் பார்த்தீபன்” அந்த வகையில் ஒர் சிறிய வரலாற்று நாடகம். நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த நாடகம். பண்பலையில் அறிவிப்பாளர்கள் அனைவரும் மிகவும் கதாபாத்திரங்கள் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக திரு. ஆர்.ஜி.எல்.நாராயாணன், திரு. டைசன், திரு. ரவி வர்மா, பெண் அறிவிப்பாளர்கள் தன்க்களின் இனிமையான குரலில் பேசி நடித்திருக்கிறார்கள். பழைய புதிய பாடல்கள் ஒலிவரும் இந்த தேன்கிண்ணத்தில் உங்களூக்காக இதோ ஒரு வித்தியாசத்திற்காக ஓர் வானொலி நாடகம் கேளுங்கள். நிச்சயம் உங்கள் நினவுகளை பின்நோக்கி இழுத்துசெல்லும். தேன் கிண்ண நேயர்கள் சார்பாக பண்பலை அறிவிப்பாளர்கள் அனைவருக்கும் ந்ன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பு: 40 நிமிட ஒலிகோஒப்பை இணையத்தில் கேட்க நேரமில்லாதவர்கள் இறக்குமதி செய்து கேட்டு விட்டு உங்கள் உணர்வுகளை எழுதுங்கள்.
9 Comments:
நாடக விழா நாடகங்களுக்காக செய்திருக்கும் தியாகங்கள் :), காத்திருந்த காத்திருப்பக்கள் எல்லாம்
கொசுவத்தியா சுத்துது.
இதோ நாடகம் கேக்கப்போறென். கேட்டுட்டு சொல்றேன்.
நாடகத்தை தந்தற்கு ஸ்பெஷல் நன்றி.
நடிகர் ஸ்ரீகாந்த் நடித்த நாடகம் ஒன்று பெயர் ஞாபகம் இல்லை.
ஸ்ரீகாந்த கர்னாடக சங்கீதப்பாடகராக வருவார். அவருக்கு ஒரு ரோபோ ஒன்று பரிசலிக்கப்படும்.
ரோபோ அருமையாகப் பாடுவதை ஒத்துக்கொள்ளாமல் அழுவார்.
அவரின் அழுகையால் தனது பாடும் சக்தியை ரோபோ இழந்து விடும்.
“மருமகளே” என்றுதான் அந்த ரோபோவை அழைப்பார்.
அந்த நாடகம் இருந்தால் கொடுங்களேன்.
வாங்க புதுகை தென்றல் அவர்களே,
/நாடக விழா நாடகங்களுக்காக செய்திருக்கும் தியாகங்கள் :), காத்திருந்த காத்திருப்பக்கள் எல்லாம்
கொசுவத்தியா சுத்துது//
நீங்களூம் ஒரு நாடகத்தில் நடிக்க முயற்சி செய்திருக்கீறிர்கள் என்று தெரிகிறது. எனக்கு கேட்பதற்க்கு தான் தெரியும்.
//நடிகர் ஸ்ரீகாந்த் நடித்த நாடகம் ஒன்று பெயர் ஞாபகம் இல்லை.//
நீங்கள் குறிப்பிட்டது பழைய நாட்கம் என்று நினக்கிறேன். அப்போது ஏன் சார் உடனே பதிவு செய்யும் சமாச்சாரங்கள் இல்லையே. இந்த நாடகம் பற்றி இப்ப தான் கேள்விப்படுகிறேன். வருகைக்கும் உங்கள் உணர்வுகளுக்கும் நன்றி.
நீங்களூம் ஒரு நாடகத்தில் நடிக்க முயற்சி செய்திருக்கீறிர்கள் என்று தெரிகிறது.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் நடிச்ச நாடகத்தை ஆரு பாப்பாக!!!
நான் நாடகம் கேக்க செய்திருக்கும் தியாகங்களைச் சொன்னேன்.
(அம்மாவுக்கு கடைக்கு போகணும், நாடகவிழா நாடகம் போடுவதற்குள் பாட்ம் படிக்கணூம் எம்புட்டு தியாகம் ) :)))))))))))))
புதுகை தென்றலாரே..
// (அம்மாவுக்கு கடைக்கு போகணும், நாடகவிழா நாடகம் போடுவதற்குள் பாட்ம் படிக்கணூம் எம்புட்டு தியாகம் ) :)))))))))))))///
ரொம்ப சரியாதான் சொன்னீங்க.
ஆக்கங்களை உருவாக்கவும் அதை ஒலியேற்றவும் நேரம், பொருள் அதிக தியாகம் செய்ய தயாராயிருக்கனும்.
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் நடிச்ச நாடகத்தை ஆரு பாப்பாக!!!//
ஏன் தலிவா நாங்க இருக்கோமே இசைப்பிரியர்கள் எல்லோரும் எல்லத்துக்கும் இசைந்து போவார்கள். சரிதானே?
தலிவாவா?
அது சரி. :)
மக்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அதனால் நடிக்கும் யோசனையை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, பதிவு மட்டும் எழுதுறேங்க..( ஒரு சிறந்த நடிகையை நாடக உலகம் இழக்கிறது.:) )
// ஒரு சிறந்த நடிகையை நாடக உலகம் இழக்கிறது.:) )..
ரொம்ம்ம்ம்ம்ம்ப சரிங்ங்க....
இந்த பதிவில் ஒரு கூத்து உள்ளது. இந்த பதிவு ஒலிப்பரப்பி ஒருவருடம் ஆகின்றது இது இரண்டு நாட்கள் முன் மறுஒலிப்பரப்பியதால் முதல் தடவை என்று நினைத்து பதிவு செய்தேன். இதில் நடித்த ஒரு அறிவிப்பாளர் எனது இனிமை நண்பர் இனியவன் ரவி வர்மா (மலயாமான் மதுராந்தகிய்ன் அப்பா கதாபாத்திரம் ஏற்றவர்) தான் தகவல் சொன்னார் சாமி இது மறுஒலிபரப்பு என்று. ஹி ஹி என்று என்னால் இளிக்கதான் முடிந்தது வேறு என்ன செய்யமுடியும்? உங்கள்..
//நடிகர் ஸ்ரீகாந்த் நடித்த நாடகம் ஒன்று பெயர் ஞாபகம் இல்லை.
ஸ்ரீகாந்த கர்னாடக சங்கீதப்பாடகராக வருவார். அவருக்கு ஒரு ரோபோ ஒன்று பரிசலிக்கப்படும்.
ரோபோ அருமையாகப் பாடுவதை ஒத்துக்கொள்ளாமல் அழுவார்.
அவரின் அழுகையால் தனது பாடும் சக்தியை ரோபோ இழந்து விடும்.
“மருமகளே” என்றுதான் அந்த ரோபோவை அழைப்பார்.
அந்த நாடகம் இருந்தால் கொடுங்களேன்.//..
இந்த மறுமொழிதான் எனக்கு நினவு வந்தது.. என்ன கொடுமைடா இதுன்னு சொல்றீங்க போல...
Post a Comment