Monday, November 17, 2008

780தமிழ் குரல்வாணன் டி.ஹெச்.அபுதுல்ஹமீது




எனது பள்ளிப்பருவத்தில் இலங்கை வானொலியில் திரு. கே.எஸ்.ராஜா அவர்களின் பாடல் தொகுப்புக்களூம், திரு. அப்துல் ஹமீது அவர்களின் ஒலித்தொகுப்புகளூம் பல வருடங்களாக கேட்டு மெய்மறந்துள்ளேன். அது ஒரு இனிமையான காலம். நடுவில் இலங்கை வானொலி சரிவர தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை. அந்த ஏக்கத்தை போக்க தான் தற்போது பல பண்பலை வானொலிகள் வந்து விட்டன. அதுமட்டுமல்லாமல் நல்ல தொழில் நுட்ப கருவிகளும் வந்துள்ளாதால். இது போல் ஒலிகோப்புக்கள் உடனே பதிவு செய்து உலகத்திலுள்ள இசைப்ப்ரியர்கள் கேட்க மிகவும் ஏதுவாக இருக்கிறது. அதன் வகையில்,
சென்ற வாரஇறுதியில் சூரியன் பண்பலையில் இரவின் மடியில் 275 ஆவது வார சிறப்பு நிகழ்ச்சி ஒலிப்பரப்பட்டது. அதில் இலங்கை வானொலி அறிவிப்பாளர் தமிழ் குரல்வாணன் திரு. டி.ஹெச்.அப்துல் ஹமீது அவர்களின் பேட்டியும் அவர் மிகவும் ரசித்த பாடல்களும் ஒலிப்பரப்பட்டது. அவரின் ரசிப்பு என்னைப்போல் ஒவ்வொரு நேயரின் மனதில் தோன்றியவற்றை மிகவும் சிறப்பாக விளக்கியது எனக்கு மிகவும் ஆச்சரியாமாக இருந்தது. பாடல்களின் விளக்கம் ரசிப்பு நமது பார்வையில் ஒரு விதமாக இருக்கும். இதோ 40 ஆண்டுகள் வானொலியில் அற்விப்பாளராகவும் அனைத்து பொருப்புக்களூம் ஏற்று பணிபுரிந்தவர் அவரின் பார்வையில் பாடல்களின் விளக்கத்தை அவரின் குரலிலே சிறிது நேரம் ஒதுக்கி கேட்டு பாருங்கள். அப்பாரம். தற்போது தொலைக்காட்சிகளில் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிகளில் நடத்திவரும் திரு. டி.ஹெச். அப்துல் ஹமீது அவர்களூக்கு பாராட்டுக்கள். இதோ கீழே அவர் ரசித்த பாடல்கள் பட்டியல் உள்ளது. திரு. அப்துல் ஹமீது அவர்களை பேட்டி கண்டவர் வேறு யாருங்க வழக்கம் போல் நமது “டிஜ்ஜிடல் குரலோன்” அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா தான்.

நேயர்களூக்கு ஒரு சிறு கேள்வி. இந்த தளத்தில் எனத் வானொலி நன்பர்களின் பழைய 7 தொகுப்புகளீலும் அவரின் குரலை பல தடவை கேட்டிருப்பீர்கள். அவர் குரலை வைத்து அவரின் வயதை தங்களால் மதிப்பிடமுடியுமா? சுமார் எவ்வளவு இருக்கும் என்று தோராயமாக சொல்லுங்கள் பார்ப்போம்? சரியான வயதை நான் என் அடுத்த பதிவில் முடிந்தால் படத்துடன் வெளியிடுகிறேன். சரீங்களா.??.. இப்போது ஒலிக்கோப்பில் கேட்டு மகிழுங்கள் நண்பர்களே.



தமிழ் குரல்வாணன் டி.ஹெச்.அபுதுல்ஹமீது

Get this widget | Track details | eSnips Social DNA


1. உயிரும் நீயே - உன்னிகிருஷ்னன் ஏ.ஆர்.ரஹ்மான்
2. மழைகூட ஒரு நாளில் தேனாகலாம் -
3. ஆராரிராரோ பாடியது யாரோ- கே.ஜே.யேசுதாஸ்- இளையராஜா
4. மாலைபொழுதில் மயக்கத்திலே - பி.சுசீலா-பாக்யலக்ஷ்மி
5. அன்பே வா அழைகின்றது - ஏ.எம்.ராஜா, ஜிக்கி
6. எனக்கு பிடித்த பாடல் - ஷ்ரோயா கோசல், ஜூலிகணபதி
7. பூஜியத்துக்குள்ளே ஒரு - டி.எம்.சவுந்திரராஜன், வளர்பிறை

8 Comments:

pudugaithendral said...

கே.எஸ்.ராஜாவின் குரல் எனக்கு மிகவும்
விருப்பமானது. உங்கள் அன்பு அறிவிப்பாளன் என்று கம்பீரக் குரலில் சொல்லும் அப்துல் ஹமீது அவர்களின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

மயில்வாகனன் சதாநந்தா, ராஜேஸ்வரி சண்முகம் என்று பெரிய லிஸ்டே இருக்கிறது.

என் கணக்குப்படி ஹமிது அவர்களுகு 70 வயது இருக்கலாம்.

Anonymous said...

அடடா புதுகை தென்றலாரே..

//என் கணக்குப்படி ஹமிது அவர்களுகு 70 வயது இருக்கலாம்.//

நான் கேட்டது திரு. அப்துல் ஹமீது அவர்கள் வயது இல்லை.

//திரு. அப்துல் ஹமீது அவர்களை பேட்டி கண்டவர் வேறு யாருங்க வழக்கம் போல் நமது “டிஜ்ஜிடல் குரலோன்” அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா தான்.//

திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களின் வயதை கேட்டேன். ஒலிக்கோப்பை மீண்டும் ஒருதடவை கேளூங்கள். உங்கள் யூகத்தை சொல்லுங்கள் பார்ப்போம்.

ஸதக்கத்துல்லாஹ் said...

நமது அன்பு அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது அவர்களின் குரலை இணையத்தில் கேட்கத் தந்தமைக்கு நன்றி.

Anonymous said...

வாங்க ஸ்தக்கத்துல்லாஹ் அவர்களே..

வருகைக்கு நன்றி. திரு.கேஸ்.ராஜா அவர்களையும், திரு. அபுதுல ஹமீது அவர்களையும் அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியுமா நணபரே? அடிக்கடி தேண்கிண்ணத்துக்கு வாங்க புதியது பழையது எல்லாம் வரும்.

Anonymous said...

sir....
bh.abdulhameed link paarthen...unga aarvam..seyal...paaratta vaarthai ilaai... thanks...

ravivarmaa,covai

Anonymous said...

வாங்க ஆர்.வி சார்,

எல்லாம் நம் இசையண்பர்களூக்காகத்தான். இந்த பதிவில் உங்கள் பங்களிப்பும் அதிகம் உண்டு என்று எனக்கு தெரியும். வருகைக்கு உங்கள் அன்புக்கும் நன்றி.

நட்புடன் ஜமால் said...

எத்துனை வயதானாலும் என்ன.

கம்பீரக் குரலுக்கு இன்னும் சொந்தக்காரர்களாய் இருக்கின்றார்களே, அதுவே நிறைவு.

Anonymous said...

வாங்க ஆதிரை ஜமால் அவர்களே..

//எத்துனை வயதானாலும் என்ன.

கம்பீரக் குரலுக்கு இன்னும் சொந்தக்காரர்களாய் இருக்கின்றார்களே, அதுவே நிறைவு//

நல்லாதான் சமாளிக்கீற்ங்கப்பா.. அடெங்கப்பா எவ்வளவு தளங்கள் எப்படி சார் எல்லாத்தையும் மேய்க்கிறீங்க (உங்க தளங்களத்தான் சொல்றேன்) நான் 10ல் அதிகபட்சம் 3 தளத்தில் பதியறதுக்குள்ளே தாவு கழண்டுடுது. வருகைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

Last 25 songs posted in Thenkinnam